தபாலக பெண் பொறுப்பதிகாரியின் மரணத்தில் பல மர்­மங்கள் ; உடலில் விஷத்தன்மை, விஷ போத்தலும் மீட்பு

Published By: Robert

31 Aug, 2017 | 10:32 AM
image

எல்­பிட்­டிய பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட குறுந்­து­கஹ ஹெதப்ம உப தபால் நிலை­யத்தில்  தீ பர­வலின் பின்னர் சட­ல­மாக மீட்­கப்பட்ட பெண் தபால் பொறுப்­ப­தி­கா­ரி­யாக கட­மை­யாற்­றிய 49 வய­தான  காஞ்­ச­ன­மாலா என்­ப­வரின் மர­ணத்தில் பல மர்­மங்கள் நில­வு­வ­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். 

Related image

இந்நிலையில் எல்­பிட்­டிய பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியின் கீழ் அது தொடர்பில் விஷேட விசா­ரணை ஒன்று ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ள­தா­கவும் பிர­தே­சத்தின் உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். விசேட­மாக குறித்த பெண் தபால் பொறுப்­ப­தி­காரி கொலை செய்­யப்பட்­டாரா அல்­லது தற்­கொலை செய்­து­கொண்­டுள்­ளாரா என்ற கோணத்தில் கிடைக்கப்பெற்­றுள்ள சாட்­சி­யங்­களின் அடிப்­ப­டையில் மேல­திக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்பட்டு வரு­வ­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.

குறித்த தபால் பொறுப்­ப­தி­கா­ரியின் சடலம் மீது எல்­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் இடம்­பெற்ற பிரேத பரி­சோ­த­னை­களின் பின்னர் திறந்த தீர்ப்­பொன்று வழங்­கப்பட்டு சட­லத்தின் பாகங்கள் மேல­திக ஆய்­வுக்­காக அரச இர­சா­யன பகு­ப்ப­ாய்­வா­ள­ருக்கு அனுப்­பப்பட்­டுள்­ளது. குறிப்­பாக அவ­ரது உடலில் விஷத்தன்மை காணப்­பட்­டுள்­ளமை பிரேத பரி­சோ­த­னை­களின் போது தெரி­ய­வந்­துள்ள நிலையில், தீக்­கி­ரை­யான தபா­ல­கத்தில் இருந்து விஷ போத்தல் ஒன்றும் பொலி­ஸாரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. 

அத்­துடன் அந்த கட்­டி­டத்­துக்குள் இருந்து மண்­ணெண்ணெய் இல்­லாத குப்பி விளக்­கொன்றும் கண்­டு­பி­டிக்­கப்பட்­டுள்­ளதால், விஷம் அருந்­திய பின்னர் குறித்த பெண் தீ பர­வலை ஏற்­ப­டுத்தி தற்­கொலை செய்­து­கொண்­டாரா என சந்­தேகம் வெளி­யிட்­டுள்­ளனர்.

எனினும் பிர­தேச மக்கள் சிலரின் சாட்­சி­யங்கள் இது கொலை சம்­ப­வ­மாக இருக்­கலாம் எனும் சந்­தே­கத்தை தோற்­று­வித்­துள்­ளது. தபா­ல­கத்தின் பிர­தான வாயிலில் இரு பூட்­டுக்கள் உடைக்கப் பட்­டி­ருந்­த­தா­கவும், தபா­லக இலாச்சியும் திறந்த நிலையில் இருந்­த­தா­கவும் பொது மக்கள் சிலர் கூறி­யுள்ள நிலையில், இந்த தீ பர­வலும், பெண் பொறுப்­ப­தி­கா­ரியின் மர­ணமும் கொலையா என்ற சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

முன் வாயிலின் பூட்­டுகள் உடைக்­கப்பட்­டுள்­ளதை அவ­த­ானித்­துள்ள  நபரொருவர் உட­ன­டி­யாக தபா­ல­கத்தில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள, உயி­ரி­ழந்த தபால் பொறுப்­ப­தி­கா­ரியின் வீட்­டுக்கு விட­யத்தை கூற சென்­றுள்ளார். இதன் போது அவர் தபா­லகம் சென்­று­விட்­ட­தாக கூறவே மீள அங்கு சென்று பார்த்த போது புகை எழு­வது கண்டு பிர­தேச மக்கள் தீ பரவல் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். 

இந்நிலையிலேயே தீயை அணைத்த பின்னர் சடலமாக குறித்த பெண் மீட்கப்பட்டுள்ளார். அந்த தபால் பொறுப்பதிகாரி, பல தடவைகள் சிறந்த உப தபால் பொறுப்பதிகாரியாக விருது வென்றவர் என தெரியவருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14