( எம்.எம்.மின்ஹாஜ் )

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் பாடசாலை மட்டத்தில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அத்துடன் இதுவரைக்கும் நாடளாவிய ரீதியில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலை மலசல கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடளாவிய ரிதியில் பாடசாலைகளில் காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து வருகின்றோம். 

கிராம மட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு நகர பாடசாலையில் கல்வி கற்க வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் உள்ளன. 

இதனை அடிப்படையாக கொண்டே கல்வியில் சமத்துவம் பேணுவதற்கு அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். 

இதேவேளை வடக்கு ,கிழக்கு மற்றும் மலையக பகுதிகளின் பாடசாலை குறைப்பாடுகள், ஆசிரிய பற்றாகுறை போன்றவை குறித்து விசேட அவதானம் செலுத்தியுள்ளோம். 

கல்வி துறை சார்ந்த அபிவிருத்தியின் போது வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு என்ற பிரதேசவாத பேதமோ இனவாத, மதவாத பேதமோ இன்றி அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்போம். 

பத்தரமுல்லையில் , இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.