(லியோ நிரோஷ தர்ஷன்)

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹூசைன் தலைமையிலான குழு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

உள்ளக நல்லிணக்கப்பொறிமுறையின் முன்னேற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாடு என்பவை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹூசைனின் இலங்கை விஜயத்தின் முக்கிய விடயங்களாக கருதப்படும் என ஐ நா அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் மனித உரிமைகள் ஆணையாளர், ஆளும் மற்றும் எதிர் த்தரப்பு சந்திப்புகளுக்கு அப்பால் வடக்கு விஜயம் , சிவில் சமூக சந்திப்புகள் , வடக்கு மற்றும் கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகளுக்கான விஜயத்தையும் மேற்கொள்ளவுள்ளார்.