உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு வாடகை மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

மாதாந்தம் 10,000 ரூபா முதல் 25,000 ரூபா வரை 6 மாதங்களுக்கு இந்த வாடகை கொடுப்பனவு வழங்கப்படும்.

அதேவேளை, குறித்த திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுகளை வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.