இலங்கைக் கிரிக்கெட் அணியை மீட்­டெ­டுக்கும் வல்­லமை எம்­மிடம் இருக்­கின்­றது என்றும் அதற்­கான வழியும் எமக்குத் தெரியும் என்றும் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால தெரி­வித்­துள்ளார்.

அதே­வேளை இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் பத­வி­யி­லி­ருந்து தான் ஒரு­போதும் விலகத் தயா­ரில்லை என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இலங்கைக் கிரிக்கெட் அணி மோச­மான தோல்­வி­களை சந்­தித்து வரு­வதால் இலங்கை அணியை மீட்­டெ­டுக்க வேண்­டு­மானால் தற்­போ­தைய இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால உட்­பட கிரிக்கெட் சபை பத­வி­வி­லக வேண்டும் என்று முன்னாள் அணித் தலை­வரும் அமைச்­ச­ரு­மான அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்­துள்ளார்.

அர்­ஜுன ரண­துங்­கவின் இந்தக் கூற்­றுக்கு பதி­ல­ளிக்கும் வகையில் பி.பி.சி. சர்­வ­தேச செய்திச் சேவைக்கு கருத்து தெரி­விக்­கும்­போதே கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

உட­ன­டி­யாக பிர­தி­பலன் இல்­லா­ததால் பதவி வில­க­வேண்டும் என்றா அவர்கள் வலி­யு­றுத்­து­கி­றார்கள் என்று கேள்வி எழுப்­பி­யுள்ள திலங்க சும­தி­பால, நீண்­ட­கால திட்­டத்­துடன் நாம் வேலை செய்­து­கொண்­டிருக்கிறோம்.

அதற்­கான திட்­டத்தை வகு­த்து அதற்­க­மை­யவே நாம் எமது நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். அந்த பலனை நாம் அடை­வ­தற்கு குறைந்­தது நான்கு ஆண்­டுகள் செல்லலாம். 

ஆனால் நாம் நிச்சயம் அதன்மூலம் நீண்டகால பலனை அடைவோம் என்றும் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.