பாரா­ளு­மன்றில் எதிர்த்­த­ரப்­பி­னரின் வாதங்­களை தனது வாதத்­தி­றனால் இலா­வ­க­மாக முறி­ய­டித்து அர­சியல் களத்தில் தனக்­கென தனி­யிடம் பிடித்துக்கொண்ட கம்­பீ­ர­மான அக்­கு­ர­லோசை நேற்­றுடன் அமைதி பெற்று விட்­டது. எனினும் அக்­கு­ர­லோ­சை­யின் இங்­கி­தத்தை எவ­ராலும் வெகு சீக்­கி­ரத்தில் மறந்து விட­மு­டி­யாது.  

Image result for அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர்

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் இலங்கை முஸ்­லிம்­களால் மாத்­தி­ர­மல்­லாது சகல சமூ­கத்­தி­ன­ராலும் மறக்க முடி­யாத ஒருவர். அவர் அர­சி­யல்­வாதி எனும் சொற்­பி­ர­யோ­கத்­திற்குள் மட்­டுப்­­பட்டு விடாது சகல துறை­க­ளிலும் தனது ஆளு­மை­யினை ஆழ வேரூன்­றி­யுள்ளார். அத­னால்தான் அவர் நாட்­டி­லுள்ள சகல மக்­க­ளாலும் அறி­யப்­பட்­ட­வ­ராக உள்ளார். 

இலங்கை அர­சியல் புலத்தில் பொது­வாக அர­சி­யல்­வா­தி­களில் அதி­க­ள­வாேனார் “அர­சியல்” என்­கின்ற துறை­யுடன் சுருங்­கி­யுள்­ளனர். எனினும் முன்னாள் அமைச்சர் அஸ்வர் அவ்­வா­றா­னவர் அல்ல, அவர் பல துறை­க­ளிலும் தனது அவ­தா­னத்தை செலுத்­தியிருந்தார்.

அவ­ரது மொழி­யாற்றல், கணீர் என்ற சொற்­பி­ர­யோகம், துடிப்­பான செயற்­பாடு மற்றும் மக்­க­ளுடன் பேணும் நல்­லு­றவு என்­ப­வற்றை அடிப்­ப­டை­யாகக்­கொண்டு அப்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் அவரை அர­சி­ய­லுக்குள் வர­வ­ழைத்து அவர் மூலம் மக்­க­ளுக்கு சேவை வழங்­கு­வ­தற்கு வழி­செய்­தனர். எனவே  அவர் ஏற்­றுக்­கொண்ட தமது பொறுப்­பினை முடி­யு­மா­ன­வ­ரையில் மக்­க­ளுக்கு ஆற்­றி­யுள்ளார் என்றே குறிப்­பிட வேண்டும்.

அவர் அதி­கா­ர­முள்ள அர­சி­யல்­வா­தி­யாக பதவி வகித்த போதிலும் மக்­க­ளுடன் எவ்­வித அதி­கா­ரத்­தோ­ற­ணை­யு­டனும் அணுகாது மிகவும் பணி­வான முறையில் தனது வாழ்க்­கை­யினை அமைத்­துக்­கொண்­டி­ருந்தார். அர­சி­ய­லுக்கு அப்பால் அவ­ரது பிரத்­தியேக வாழ்க்­கையும் மிகவும் சாதா­ர­ண­மாக அமைந்­தி­ருந்­தது. அவ­ரது வீடே ஒரு நூலகம் போல் அமைந்­தி­ருந்­தது.  மேலும் அங்­குள்ள சகல நூல்­க­ளையும் அவர் படித்­துள்­ளமை அவ­தா­னத்­திற்­கு­ரிய ஒன்­றாகும்.

1937 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் எட்டாம் திகதி  பிறந்த முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர், கொழும்பு ஸாஹிரா கல்­லூ­ரியில் தனது கல்­வியைத் தொடர்ந்தார். பாட­சாலைக் காலத்­தி­லேயே சிறந்து விளங்­கி­ய­துடன் பல­து­றை­க­ளிலும் தனது காத்­தி­ர­மான பங்­க­ளிப்பை வழங்­கி­யுள்ளார். அத்­துடன் பாட­சா­லைக்­கா­லத்தில் பேச்சுப் மற்றும் விவாதப் போட்­டி­களில் கலந்­து­கொண்டு பல விரு­து­க­ளையும் வென்­றுள்ளார்.

 மேலும் அக்­கா­லப்­பி­ரி­வி­லேயே பல்­வேறு மொழி­க­ளைக்­கற்­றுக்­கொள்ள வேண்டும் என்­கின்ற ஆர்வம் அவ­ரி­டம் காணப்­பட்­ட­துடன் அதில் மிகுந்த அவ­தானமும் செலுத்­தி­யுள்ளார். பாட­சா­லைக்­கல்­வியின் பின்னர்  மஹ­ர­கம கபூ­ரிய்யா அரபுக் கல்­லூ­ரியில் சேர்ந்து மார்க்கக் கல்வி பயின்­றுள்ளார். பின்னர் அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள தேரர் ஒரு­வ­ரிடம் பாளி மொழி­யையும் கற்­றுக்­கொண்­டுள்ளார்.

 எனவே தனது கல்வி நட­வ­டிக்­கை­களை முடித்­துக்­கொண்ட பின்னர் மஹ­ர­கம செய்­தி­யா­ள­ராக பத்­தி­ரி­கைத்­துறையில் தொழிலை ஆரம்­பித்­துள்ளார். நீண்ட காலம் அத்­துை­ற யில் ஈடு­பட்டு ஊட­கத்­துை­றக்கு  மிகுந்த பங்­காற்­றி­யுள்ளார். மேலும் அக்­கா­லப்­பி­ரி­வி­லேயே அவர் மொழி­பெ­யர்ப்­பா­ள­ரா­கவும் கட­மை­யாற்­றி­யுள்ளார்.  பின்னர் முன்னாள் சபா­நா­யகர் பாக்­கீர்­மாக்­காரின் பிரத்­தி­யேக செய­லா­ள­ரா­கவும் கட­மை­யாற்­றி­யுள்ளார்.

அப்­போ­து­முதல் அர­சி­யலில்  சிறி­தாக ஈடு­ப­டு­வ­தற்கு ஆரம்­பித்­துள்ளார்.  எனினும் நேர­டி­யான அர­சியல் வாழ்க்­கை­யினை 1950 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் லங்கா சம­ச­மாஜக் கட்­சி­யூ­டா­கவே ஆரம்­பித்­துள்ளார். அக்­கட்­சியில் இணைந்து செயற்­பட்ட காலத்தில் பல்­வேறு மக்கள் உரிமைப் போராட்­டங்­க­ளிலும் துடிப்­புடன் ஈடு­பட்­டுள்ளார். 

பின்னர் அவ­ரது அர­சியல் செயற்­பா­டு­களை அவ­தா­னித்த ஐக்­கிய தேசியக்­கட்­சியின் அப்­போ­தைய தலை­வர்கள் அவரை ஐக்­கிய தேசியக் கட்­சியில் இணைத்­துக்­கொள்­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­தனர். எனவே அவர் 1955 ஆம் ஆண்டு ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து செயற்­படத் தொடங்­கினார். முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­ஸவின் மிகுந்த விருப்­பைப்­பெற்ற அவர் பிரே­ம­தா­ஸவின் பிரத்­தி­யேக மொழி­பெ­யர்ப்­பா­ள­ராக நீண்ட காலம் கட­மை­யாற்­றி­யுள்ளார்.

பின்னர் 1989 ஆம் ஆண்டு ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேசியப் பட்­டியல் ஊடாக பாரா­ளு­மன்­றிற்குத் தெரி­வானார். மேலும் நீண்ட காலம் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக அங்கம் வகித்த அவர் முஸ்லிம் சமய விவ­கார இரா­ஜாங்க அமைச்சு, பாரா­ளு­மன்ற விவ­கார அமைச்சுப் பத­வி­க­ளையும் வகித்தார். 

 அவர் முஸ்லிம் சமய விவ­கார இரா­ஜாங்க அமைச்­ச­ராக பதவி வகித்த காலத்தில் முஸ்­லிம்­களின் விட­யத்தில் பல்­வே­று­பட்ட அபி­வி­ருத்திப் பணி­க­ளையும் மேற்­கொண்­டி­ருந்தார். அக்­கா­லப்­ப­கு­தி­யி­லேயே தேசிய மீலாத் விழாவை ஆரம்­பித்து அதற்­கென அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து நிதி­யொ­துக்­கீட்­டையும் பெற்று முஸ்லிம் பிர­தே­சங்­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான வழி­வ­கை­க­ளையும் மேற்­கொண்­டி­ருந்தார். அதனாலேயே இன்றும் தேசிய மீலாத் விழாவை முன்­னிட்டு பல்­வேறு வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

பின்னர் 2008 ஆம் ஆண்டு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் சேர்ந்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் இணைந்து செயற்­பட ஆரம்­பித்தார். பின்னர் 2010 ஆம் ஆண்டு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேசி­யப்  பட்­டியல் உறுப்­பி­ன­ராக மீண்டும் பாரா­ளு­மன்­றிற்குத் தெரி­வானார். மேலும் அக்­கா­லப்­கு­தியில்  ஊட­கத்­துறை தொடர்­பான கண்­கா­ணிப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவும் அவர் கட­மை­யாற்­றினார்.பின்னர் 2014 அம் ஆண்டு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யை அவர் இரா­ஜி­னாமாச் செய்தார். அத்­துடன் அவர் இறக்கும்வரை கூட்டு எதிர்க்­கட்­சியின் முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணியின் பெய­ல­தி­ப­ரா­கவும் கட­மை­யாற்­றி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

அத்­துடன் முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான ஜே.ஆர்.ஜய­வர்­தன, ஆர்.பிரே­ம­தாஸ, டி.பி. விஜ­ய­துங்க, மஹிந்த ராஜ­பக் ஷ ஆகி­யோர்­க­ளுடன் நெருக்­க­மான உற­வு­பே­ணி­யவர் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. மேலும் பாரா­ளு­மன்றின் நிலை­யியல் கட்­ட­ளைகள் மற்றும் இதர விவ­கா­ரங்­களில் மிகுந்த பாண்­டித்­தியம் பெற்­றவர். அத்­துடன் பாரா­ளு­மன்­றி­லுள்ள அனைத்து துறை­சார்ந்த குழுக்­க­ளிலும் அங்கம் வகித்­துள்ளார். சக­ல­வி­த­மான விவா­தங்­க­ளிலும் கலந்து தனது பங்­க­ளிப்பை வழங்­கி­யுள்ளார்.

 கலை இலக்­கியத் துறை­யிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர் “வாழ்­வோரை வாழ்த்­துவோம்” எனும் மகு­டத்தின் மூலம் ஏரா­ள­மா­ன­வர்­களை கெள­ர­வித்து கலை­இ­லக்­கி­ய­வா­தி­களின் நன்­ம­திப்­பையும் வென்­றுள்ளார். மேலும் ஊட­கங்­களின் கிரிக்கெட் வர்ணனை­யா­ள­ராகச் செயற்­பட்­ட­மை­யும்­கு­றிப்­பி­டத்­தக்­கது.

 மேலும் முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின் தலை­வ­ரா­கவும் அகில இலங்கை முஸ்லிம் கல்வி  மாநாட்டின் உப­த­லை­வ­ரா­கவும் நீண்ட காலம் பதவி வகித்து பல்­வேறு சேவைகளைச் செய்­துள்ளார். மேலும் மர­ணிக்கும் வரையில் குறித்த அமைப்­பு­களின் ஆலோ­ச­க­ரா­கவும் செயற்­பட்­டுள்ளார்.

 செனட்டர் மஷூர் மெள­லானா, முன்னாள் அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீட் ஆகி­யோரின் வாழ்க்கை வர­லாறு தொடர்­பான நூல்கள் உட்­பட  பல நூல்­க­ளையும் வெளி­யிட்­டுள்ளார். அவர் மரணிக்கும்போதும் சில நூல்களை வெளியிடுவதற்கான பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 மேலும் முஸ்லிம் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் கிராமங்களின் வரலாறுகள் பற்றிய தகவல்களைத் தொகுத்துள்ளதுடன அதுபற்றிய உரைகளையும் ஆற்றியுள்ளார்.  மேலும் முஸ்லிம் நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளுடனும் சிறந்த உறவைப்பேணி வந்துள்ளார்.

அத்துடன் நாட்டில் அவ்வப் போது  முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த நெருக்கடிகளின் போதும் அதற்கெதிராக குரல் கொடுத்ததுடன் அதனை ஆட்சியாளர்களின் கவனத்திற் கொண்டுவருவதிலும் மிகுந்த பங்காற்றியுள்ளார்.

 எனவே இவ்வாறான பல சேவைகளை ஆற்றிய முன்னாள் அமைச்சர் ஏ.எச்,எம்.அஸ்வரின் மறைவு நாட்டு அரசியலில் வெற்றிடம் ஒன்றை ஏற்படுத்தவுள்ளமை தவிர்க்க முடியாத ஒன்றாகும்.