இந்­தியா, சீனா, அமெ­ரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடு­க­ளுடன் எமக்கு எந்­த­வொரு பிரச்­சி­னையும் இல்லை. குறித்த நாடு­களுடன் நட்புகொண்டு பிரச்­சி­னைகள் இல்­லாமல் தொடர்ந்து பய­ணிப்போம். அத்­துடன் இந்த நாடு­களின் நிதி உத­வி­களை பெற்று நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை பலப்­ப­டுத்­துவோம் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

Image result for பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க virakesari

அத்­துடன் 2020 ஆம் ஆண்­ட­ளவில் பொரு­ளா­தா­ரத்தில் பாரிய மாற்றம் ஏற்­படும். 2025 ஆம் ஆண்டில் கடன் இல்­லாத நாட்டை உரு­வாக்­குவோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பு மாவட்­டத்தில்  நேற்று 1100 குடும்­பங்­க­ளுக்கு வீட்டு கடன் உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி ஆர்.பிரே­ம­தா­ஸவே வீட்டு திட்­டத்தை ஆரம்­பித்தார். அதற்கு முன்னர் வீட்டு திட்­டங்கள் வலு­வா­ன­தாக இருக்­க­வில்லை.  இது வரைக்கும் வீட்டு திட்­டத்­திற்­காக 2200 கோடி ரூபாவை செல­விட்­டுள்ளோம். 

இதன்­படி நாம் தொடர்ந்து வீட்டு திட்­டத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­குவோம்.இந்­நி­லையில் தற்­போது நாம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்­கத்தை நிறு­வி­யுள்ளோம். நாம் ஆட்சி பீட­மேறும் போது சுற்று வட்டம் பூரா­கவும் கடன் சுமை காணப்­பட்­டது. 

நாட்­டி­லுள்ள கடன் சுமையை தீர்க்க முடி­யாத கார­ணத்­தி­னா­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இரு வரு­டங்­க­ளுக்கு முன்பே தேர்­தலை நடத்­தினார். அத்­துடன் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கும் கடன் செலுத்த முடி­யாது என்றே எம்மை பார்த்து கூறினர். எனினும் நாம் இரு வரு­டங்­களில் கடன் செலுத்­து­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­களை செய்து விட்டோம் . அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா நிறு­வ­னத்­துடன் கைகோர்த்து அரச, தனியார் கூட்டு பங்­காண்மை மூல­மாக முன்­னேற்­ற­வுள்ளோம். இந்த வேலைத்­திட்­டத்தின் ஊடாக கடன் சுமையை மேலும் குறைக்க முடிந்­தது.

தேசிய அர­சாங்கம் இவ்­வ­ளவு கடன் சுமைக்கு மத்­தி­யிலும் பெற்றோல் , சமயல் எரி­வாயு உட்­பட அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை­களை குறைத்து, வரு­மா­னத்தை அதி­க­ரித்­தது. அரச ஊழி­யர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரித்தோம். இரு வரு­டத்தில் இரண்­டரை இலட்சம் தொழில்­வாய்ப்­பு­களை உரு­வாக்­கி­யுள்ளோம். எனவே பொரு­ளா­தா­ரத்தை மேலும் பலப்­ப­டுத்­தி­யுள்ளோம். 

அத்­துடன் தற்­போது நாம் இந்­தி­யா­வுடன் நல்ல நட்பை வைத்து கொண்­டுள்ளேம். எந்­த­வொரு பிரச்­சி­னையும் இல்லை. சீனா­வு­டனும் ஐப்­பா­னு­டனும் அமெ­ரிக்­கா­வு­டனும் ரஷ்­யா­வு­டனும் எந்­த­வொரு பிரச்­சி­னையும் எமக்கு இல்லை. ஆகவே இந்­தியா, சீனா, அமெ­ரிக்கா, ரஷ்யா மற்றும் ஐப்பான் ஆகிய நாடு­க­ளுடன் நட்பு கொண்டு பிரச்­சி­னைகள் இல்­லாமல் தொடர்ந்து பய­ணிப்போம்.

 ஜப்­பானின் நிதி உத­வி­யுடன் கண்டி நக­ரத்தை அபி­வி­ருத்தி செய்­ய­வுள்ளோம். அத்­துடன் அதி­வேக வீதி, மேல் மாகாண மாந­கர வேலைத்­திட்டம், சுற்­றுலா துறை உள்­ளிட்ட அனைத்து துறை­யையும் நாம் வளர்ச்­சிக்கு உட்­ப­டுத்­த­வுள்ளோம்.மேலும் திரு­கோ­ண­மலை, மாத்­தறை, அம்­பாந்­தோட்டை உள்­ளிட்ட அனைத்து பகு­தி­களை அபி­வி­ருத்தி செய்யவுள்ளோம். மேலும் வடக்கு, மலையகம், கிராமிய பகுதிகளில் வீடமைப்பு திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். 

இதன்படி 2020 ஆம் ஆண்டளவில் பொருளாதாரத்தில் பாரிய மாற்றம் செய்யப்படும். 2025 ஆம் ஆண்டில் நாட்டின் முழுமையான கடன் சுமையை நாம் இல்லாமல் செய்வோம் என்றார்.