இலங்கை தெரிவுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய சற்றுமுன் தனது இராஜிநாமா கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் கையளித்துள்ளார்.

இதேவேளை, சனத் ஜயசூரியவுடன் இணைந்து மேலும் சிலர் தமது இராஜிநாமா கடிதங்களை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளித்துள்ளனர்.இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக தோல்வியுற்று வரும் நிலையில் இலங்கை அணியின் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்களின் அழுத்தங்களையடுத்து தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரியா உட்பட சில அதிகாரிகள் தமது இராஜிநாமா கடிதங்களை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.