பாடசாலையில் முதலாம் தரத்துக்கு மாணவியை இணைத்துக்கொள்வதற்காக 25,000 ரூபா இலஞ்சம் பெற்ற முன்னாள் பெண் அதிபரொருவருக்கு 8 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு, மேல் நீதிமன்றத்தில் தீர்ப்பளித்துள்ளது.

பாணந்துறை பிரதேசத்திலுள்ள பிரசித்திபெற்ற பாடசாலையின் முன்னாள் அதிபருக்கே 8 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு குறித்த முன்னாள் அதிபர் இவ்வாறு பணம் பெற்றுக்கொண்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அதிபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கில் 2 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு குற்றங்களுக்கும் தலா 4 வருடங்கள் சிறைத்தண்டனை வீதம் 8 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் 5,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.