மருதானையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மருதானை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், முச்சக்கர வண்டி மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அதில் பயணித்த இருவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர்கள் 20 மற்றும் 26 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.