பிரித்­தா­னி­யா­வி­லுள்ள சிறைச்­சா­லை­யொன்றில் சிறைக்­கை­திகள்  நிர்­வாணக் கோலத்தில் நாய்கள் போன்று சண்­டை­யி­டு­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­வதை  வெளிப்­ப­டுத்தும் காணொளிக்  காட்­சி­யொன்று வெளி­யாகி பெரும் சர்ச்­சையை தோற்­று­வித்­துள்­ளது.

  மேற்­படி காணொளிக் காட்­சி­யா­னது கிரேட்டர் மான்­செஸ்­டரில் சுவின்டன் பிராந்­தி­யத்­தி­லுள்ள பொரெஸ்ட் பாங் சிறைச்­சா­லையில் பட­மாக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 சிறைச்­சாலைக் கைதி­களில் இருவர் போதை­வஸ்து துண்­டொன்றைப் பெறு­வ­தற்­காக   தமது ஆடை­களை களைய நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட பின்னர்   நாய்கள் போன்று துணிப் பட்­டியால் கட்­டப்­பட்டு   சண்­டை­யிட வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றனர்.

 இதன்­போது அந்த இரு கைதி­களும் ஒரு­வ­ரது பிருஷ்டப் பகு­தியை மற்­றவர் முகர்­வதும் பின்னர் அந்தப் பகு­தியில் கடிப்­ப­து­மாக சண்­டை­யி­டு­கின்­றனர்.

 அத்­துடன்  அந்தக் காணொளிக் காட்­சியில் குறிப்­பிட்ட சிறைக்­கூ­டத்தில் மடிக்­க­ணினி மற்றும்  சுடு­நீர்­போத்­தல்கள் என்­பன காணப்­ப­டு­கின்­றன. அதே­ச­மயம் சண்­டை­யிடும் சிறைக்­கை­திகள்  ஆரம்­பத்தில் கைதிகள் அணியும் ஆடையை அணி­யாது சாதா­ரண உடை­யுடன் காணப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

  இந்நிலையில் மேற்படி காணொளிக் காட்சியின் உண்மைத் தன்மை குறித்து  கண்டறிய பிராந்திய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.