பிளாஸ்டிக் பைக­ளுக்குத் தடை : மீறினால் 38,000 டொலர் தண்டம் அல்­லது 4 வருட சிறை

Published By: Robert

29 Aug, 2017 | 10:13 AM
image

கென்­யாவில் பிளாஸ்டிக் பைக­ளுக்கு நேற்று திங்­கட்­கி­ழமை முதல் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

Image result for பொலித்தீன்  virakesari

இதன் பிர­காரம் எவ­ரா­வது பிளாஸ்டிக் பைகளை விற்­பதோ அன்றி உற்­பத்தி செய்­வதோ கண்­டு­பி­டிக்­கப்­பட்டால்  அவர் 38,000  அமெ­ரிக்க  டொல­ருக்கும் அதி­க­மான தண்டப் பண விதிப்பை அல்­லது 4  வரு­டங்­க­ளுக்கு மேற்­பட்ட சிறைத்­தண்­ட­னையை எதிர்­கொள்ள நேரிடும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

  சுற்­றுச்­சூழல் மாச­டை­வதைத் தடுக்­கவே பிளாஸ்டிக் பைக­ளுக்குத் தடை விதித்­துள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்கம் கூறு­கின்ற அதே­ச­மயம், அந்தப் பைகளை உற்­பத்தி செய்­ப­வர்கள்   மேற்­படி தடையால் 80,000  வேலை வாய்ப்­புகள் வரை இழக்­கப்­ப­டலாம் என வாதிட்டு வந்­தனர்.

 இந்தத் தடைக்கு எதி­ராக நீதி­மன்­றத்தின் மூலம் முன்­னெ­டுக்­கப்­பட்ட சவால்கள் கார­ண­மாக அந்தத் தடையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது பல வருட கால தாம­தத்தை எதிர்­கொண்­டது.

  இந்­நி­லையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இந்தத் தடை தொடர்­பான மேன்­மு­றை­யீட்டை விசா­ரித்த அந்­நாட்டு நீதி­மன்றம் மேற்­படி தடைக்கு ஆத­ர­வாக தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

 இது  பிளாஸ்டிக் பைக­ளுக்கு தடை விதிக்கும் முக­மாக கடந்த 10  வருட காலப் பகு­தியில் மேற்­கொள்­ளப்­பட்ட மூன்­றா­வது முயற்­சி­யாகும்.

கென்ய மக்கள் ஒரு மாதத்துக்கு 24  மில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பைகளை  உபயோகித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47