இலங்கை கிரிக்கெட்டை நிர்வகிப்போருக்கு எதிராக கூச்சலிடுங்கள் :  அர்ஜுன

Published By: Priyatharshan

28 Aug, 2017 | 07:43 PM
image

இந்திய ரசிகர்கள் போல்  வீரர்களுக்கு எதிராக கூச்சலிட்டு வசைபாடுவதை இலங்கை அணி ரசிகர்கள் நிறுத்தி விட்டு இலங்கை கிரிக்கெட்டை நிர்வகித்துவரும் அதிகாரிகளுக்கு எதிராக கூச்சலடித்து அடித்து வசைபாடுமாறு இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பெற்றறோலியக் கூட்டுத்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்திய அணிக்கு எதிராக பல்லேகலயில் நேற்று இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்ற சம்பங்கள் தொடர்பில் நான் வருத்தமடைகின்றேன். வீரர்களுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் செயற்படுவதைப் போன்று செயற்படாது இலங்கை கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக கூச்சலிடுங்கள்.

இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெறும் கசப்பான சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கடந்த காலங்களில் எடுத்துக் கூறியுள்ளேன்.  தற்போது அது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடந்த வியாழக்கிழமை மாலை கடிதம் எழுதியுள்ளேன். அதன் பிரதியை பிரதமருக்கும் அனுப்பியுள்ளேன்.

அதனையடுத்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவும் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். கிரிக்கெட் நிறுவனத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நான் பலமுறை தெரிவித்திருந்த போதிலும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து தீர்வு எடுக்க வேண்டியவர்கள் கூட நடவடிக்கை எடுக்காது இருப்பதால் இறுதியில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். 

பல்லேகல மைதானத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவம் நாட்டில் இதுவரை இடம்பெறவில்லை. நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை விரும்புபவர்கள் அதிகம் உள்ளனர். எமது நாட்டின் கிரிக்கெட் விளையாட்டு அடிமட்டத்தை நோக்கிச் செல்கின்றது. நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேணடும்.

எமது கிரிக்கெட் விளையாட்டுக்கு என்று கலாச்சாரம், வரலாறு இக்கின்றது. வெற்றியடைந்தாலும்  தோல்வியடைந்தாலும் நாம் சிரித்துவிட்டு வீட்டுக்குப்போகும் ரசிகர் கூட்டம். விளையாட்டு வீரர்களுக்கு எதிராக கடந்த காலங்களில் பல அநாவசியமான சம்பவஙகள் மற்றும் விசாரணைகள் இடம்பெற்றன.  

கிரிக்கெட் விளையாட்டில் பல தேவையில்லாத விடயங்கள் இடம்பெறகின்றன. அவற்றை நாம் மாற்ற வேண்டும். இதனால் தான் நாம் புதிய அரசாங்கத்தை உருவாக்கியிருக்கிறோம். 

விளையாட்டு அமைச்சரிடமும் இது குறித்து தெரிவித்துள்ளோம். கிரிக்கெட் நிறுவனத்தில் உள்ளவர்கள் தமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை  உணர்ந்து செய்ய வேண்டும். அங்கு சூது விளையாடுபவர்களே அதிகமாகவுள்ளனர்.

கிரிக்கெட் நிர்வாகம் வீரர்களை சரியான முறையில் வழிநடத்த வேண்டும். கிரிக்கெட்டில் மாபியா புகுந்துள்ளது. இதை விளையாட்டு அமைச்சர் உணர்ந்து கொள்ள வேண்டும். 

இவ்வாறு கிரிக்கெட்டின் தரம் செல்லுமாகவிருந்தால் எதிர்காலத்தில் கிரிக்கெட் அதலபாதாளத்திற்குள் சென்று விடும். இதை விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பேற்கவேண்டும். கிரிக்கெட் விளையாட்டை நிர்வகிக்கக்கூடிய சரியான நபரை தெரிந்தெடுத்து அவரிடமம் அதனை ஒப்படைக் வேண்டும். 

கிரிக்கெட்டின் நிலைமை மோசமடைந்து சென்றால் அதனை எவ்வாறு சீர்செய்வதென மக்கள் முடிவெடுப்பர். இதற்கு  ஜனாதிபதி மற்றும் பிரதமர் எவ்வாறான முடிவெடுக்கப்போகின்றனரென பொருத்திருந்து பார்ப்போம்.

தற்போதைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபாலவின் செயல்பாடு என்னவென்று எல்லோருக்கும் தெரியும். அங்கு பரிய மோசடி செய்பவர்கள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு சம்பளம் எவ்வளவு வழங்கப்படுகின்றது என்று விளையாட்டு அமைச்சர் ஆராய்ந்து பார்க்க வேணடும்.

தற்போது வீரர்கள் களத்திற்கு ஆடுவதற்காகப் போனால் அடுத்த போட்டியில் நாம் ஆடுவமா என்று தான் எண்ணுகின்றனர். அதனால் அவர்கள் அணிக்காக விளையாடுவதற்காக எண்ணாது தனிப்பட்ட முறையில் தான் விளையாட நேரிடும். எமது காலத்தில் அப்படியல்ல. 

திரிமன்னேயை ஒருவருடத்தின் பின் விளையாட விடுகின்றனர். வீரர்களின் திறமையை எவராலும்  மூடி மறைக்க முடியாது. அது  எப்போதும் வெளியில் வரத்தான் எத்தனிக்கும். சந்திமாலுக்கு நேற்று ஏற்பட்ட ஊபாதை தொடர்பில் வருத்தமடைகின்றேன்.

கிரிக்கெட்  விளையாட்டில் ஆர்வம்  உள்ளதால் நான் இவ்வாறு செயற்படுகின்றறேன்.  ஊடகங்கள் வாயிலாகத்தான் கிரிக்கெட்டில் பிரச்சினையுள்ளதென தெரிந்துகொண்டேன். விளையாட்டுகளில் அரசியலை கலக்கத் தேவவையில்லை. அரசியல்வாதிகளால் விளையாட்டுக்கு நல்ல ஆதரவை வழங்க முடியும். 

காலையில் இருநு்து மாலை வரை பயிற்சியில் ஈடுபட்டு குடும்பத்தினரை விட்டு விளையாட்டுக்காக தம்மை அர்ப்பணிக்கும் வீரர்களுக்கு எதிராக கூச்சலிட்டு வசைபாட வேண்டாம். மாறாக குளிரூட்டப்பட்ட அறைகளில் இருக்கும் கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக கூச்சலிட்டு வசைபாடுங்கள்.

வீரர்களை நாம் பாதுகாக்க வேணடும். அவர்களை வளர்க்க நாம் பாடுபடவேண்டும். நிர்வாகத்தில் இருக்கும் பிரச்சினைக்காக நாம் வீரர்களை எதிர்க்க வேண்டாம்.  திலங்க சுமதிபால கண்ணாடிக்கு முன்னால் இருந்து பார்க்க வேணடும் தான் கதிரையில் அமரந்து இருக்க சரியானவரா என.

கிரிக்கெட் தொடர்பில் ஆலோசனை வழங்கவுள்ளவர்கள் பந்தையக்காரர்கள் தாதேன அப்போது கிரிக்கெட்டில் பந்தையம் தானே களைகட்டியிருக்கும். நான் கிரிக்கெட்டுக்குள் இருந்தோம். எமக்கு அது தொடர்பில் விளங்கும். 

கிரிக்கெட் நிறுவனத்தில் இருக்கும் மோசடிகள் குறித்து நாட்டுக்கு வெளியில் சென்று கருத்து வெளியிட முடியம். நாட்டுக்கு எதிராக செயற்பட எனக்கு விருப்பமில்லை. 

புதிய நிர்வாகத்தை அமைக்க முடியாவிட்டால் கிரிக்கெட் அதலபாதாளத்திற்கு சென்றுவிடும். அங்கே பந்தையக்காரர்கள் இருப்பதாக விளையாட்டு அமைச்சருக்கு தெரிவித்த போதும் அவர் சிரித்துவிட்டு இருக்கிறார்.

சுமதிபால குடும்பம் என்றால் அது சூதாட்ட வியாபாரம் செய்யும் குடும்பம். அவர்கள் கிரிக்கெட்டிலும் அதனை தொடரவே செய்கின்றனர்.

கிரிக்கெட் எனது உயிர்.  1996 ஆம் ஆண்டில் நாம் உலகக் கிண்ண போட்டியில் விளையாடும் போது விடுதலைப் புலிகள் கூட அன்றைய தினம் யுத்தத்தில் ஈடுபடாது யுத்ததை நிறுத்தியிருநு்தனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41