மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவை,பன்னிப்பிட்டிய, பெலென்வத்த, மத்தேகொட,ஹோமாகம மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களில் நாளை அதிகாலை 4 மணி வரை நீர் விநியோகத் தடைப்படும் என நீர் விநியோக மற்றும் வடிகால் அமைப்பு தெரிவித்துள்ளது.

நீர் வெட்டு தொடர்பாக மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்காக 1939 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு நீர் விநியோக மற்றும் வடிகால் அமைப்பு  தெரிவித்துள்ளது.