மீன் பிடிக்கக் குதிரையில் கடலுக்குச் செல்லும் ஆச்சரிய மீனவர்கள்.!

Published By: Robert

28 Aug, 2017 | 10:13 AM
image

பெல்ஜியத்தின் வடமேற்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள  ஓஸ்ட்டி யூன்கிர்கே ( OostDuinkerke ) எனும் சிறு கடற்கரை கிராமத்து மீனவர்கள் கடலுக்கு குதிரையில் சென்று மீன் பிடிக்கின்றனர் .

ஆங்கிலத்தில் ஷ்ரிம்ப் (Shrimp ) 

எனச் சொல்லப்படும் ஒரு வகை இறால் மீனைப் பிடிக்கத்தான் இவர்கள் இந்தக் குதிரைகளில் போய்க் கொண்டிருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இப்படியாகக் குதிரைகளில் கடலுக்குச் சென்று இறால்களைப் பிடிக்கும் பழக்கம் ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்திருக்கிறது. ஆனால், காலப் போக்கில் அவை அழிவடைந்துவிட்டன. ஆனால், பெல்ஜியத்தின் ஓஸ்ட்டியூன் கிர்கே பகுதியில் மட்டும் இந்த நூற் றாண்டுகால பழக்கம் இன்னும் எஞ்சி யிருக்கிறது. 

பெல்ஜியத்தின் இந்தக் கடற்கரைப் பகுதிகளில் கிராங்கன் ( Crangon ) எனும் இறால் வகை அதிகளவில் கிடைக்கும். கடற்கரைக்கும் செல்லும் இந்தக் குதிரைகளிலிருந்து, அது கட்டப்பட்டிருக்கும் வண்டிகள் கட்டவிழ்க்கப்படும். முதுகின் இருபுறத்திலிருந்து 10 மீட்டர் தூரத்துக்குக் கயிறு கட்டப்பட்டு அதன் முடிவில் வலை இணைக்கப்பட்டிருக்கும். அதன் முதுகின் இருபக்கமும் கூடைகளைக் கட்டிவிட்டு அதன்மீது ஏறி அமர்வார்கள் அந்த மீனவர்கள். மெள்ள, மெள்ள குதிரையைக் கடலுக்குள் செலுத்துவார்கள். குதிரைகளுக்குக் கடல் அவ்வளவு விருப்பமானவை அல்ல. அந்தக் குதிரைகளைக் கடலுக்குள் செலுத்த குறைந்தது ஓராண்டு காலமாவது அவைகளுக்குப் பயிற்சியளிக்கப்பட வேண்டும். இருந்தும் ஒவ்வொரு முறையும் கடலுக்குள் செல்லும்போது அவை பயப்படவே செய்யும். ஆனால், குதிரை ஓட்டும் அவர்களின் தைரியம்தான் குதிரைகளுக்கும் தைரியம் கொடுக்கும். அந்த தைரியத்தின் அடிப்படையில் கடலுக்குள் செல்லும். 

கரையிலிருந்து பின்னால் கட்டப்பட்டிருக்கும் வலைகளை இழுத்தபடியே கடலுக்குள் நடக்க ஆரம்பிக்கும். குதிரை கழுத்தளவு மூழ்கும் அளவுக்கு நடக்கும். கடல் அலைகளின் ஓட்டத்தையும், காற்றின் திசையையும் கணக்கிட்டு குதிரைகளைச் செலுத்த வேண்டும். பெரும்பாலும், அதிகாலை நேரங்களில் குறைந்த அலையின் போதுதான் இறால்களைப் பிடிக்க சரியான சமயம். அரை மணி நேரம் கடலிலிருந்து கரைக்கு வருவார்கள். சிறிது நேரம் குதிரைக்கு ஓய்வு கொடுப்பார்கள். அதே நேரத்தில் வலையில் சிக்கிய இறால்களைச் சிறு சல்லடையில் போட்டு சலிப்பார்கள். அதில் சின்ன இறால்கள் மற்றும் வேறு சிறு உயிரினங்கள் கீழ் விழும். அதை மீண்டும் கடலுக்குள் தூக்கியெறிந்து விடுவார்கள். பின்னர், ஓய்வுக்குப் பிறகு மீண்டும் கடலுக்குள் செல்வார்கள். இப்படியாக, ஒரு நாளைக்கு மூன்று தடவை செய்வார்கள். ஒரு நாளைக்கு 20 கிலோ இறால்கள் வரைப் பிடிக்கிறார்கள். வருடத்தின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் முழுவீச்சில் இந்த வேலைகளைச் செய்கிறார்கள். 

மின்பிடிக்க செல்லும் குதிரைகள் மிகவும் அழகானவை. பந்தயங்களில் பறந்தோடும் வகையிலான குதிரை அல்ல அது, அதே சமயம் மூட்டைகளைச் சுமக்கும் கோவேறுக் கழுதை வகையறாவும் இல்லை. சின்னத் தலை, குட்டையான கால்கள், அந்தக் கால்களில் பாதத்தின் அருகே அழகான முடி, பெரிய கழுத்து, உறுதியான தோள்கள், அழகான கண்கள் என அழகும், உறுதியும் ஒருசேர சேர்ந்து காணப்படுகிறது. 

இன்று நவீன தொழில்நுட்பங்கள் மீன்பிடித்தொழிலில் பல சிக்கல்களை ஏற்படுத்தி வரும் சூழலில், பாரம்பரிய முறைகளே இயற்கைக்கு உகந்ததாகவும் , இயற்கை வளங்களை ஒரேயடியாகச் சுரண்டாமல் பாதுகாக்கும் வழியாக இருக்கின்றன. அப்படியாக இருந்து வந்த இந்த மீன்பிடி முறை 1990களில் வெறும் 4 பேரால் மட்டுமே செய்யப்பட்டு வந்தது. பின்னர், பெல்ஜியம் அரசு இதற்கெனத் தனிக் கல்லூரி படிப்பை அறிமுகப்படுத்தியது. 

அதைத் தொடர்ந்து, இன்று ஒரு பெண் உட்பட 19 பேர் இந்த முறையைக் கற்றுத் தேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இதைத் தங்கள் நாட்டின் பெருமையாகக் கருதுகின்றன பெல்ஜிய நாட்டவர்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41