ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இலங்கை வருகின்றது.!

Published By: Robert

28 Aug, 2017 | 10:25 AM
image

ஐரோப்­பிய ஒன்றியத்தின் ஐந்து பேர் அடங்­கிய குழு ஒன்று செப்­டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி இலங்­கைக்கு உத்­தி­யோ­கபூர்வ விஜயம் மேற்­கொள்­ள­வுள்­ளது. இலங்­கைக்கு கிடைக்­கப்­பெற்ற ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கைக்கு பின்­ன­ரான சூழல் தொடர்பில் கண்­காணிக்கும் முக­மா­கவே அவர்கள் இலங்­கைக்கு வர­வுள்­ளனர்.

குறித்த விஜயம் தொடர்பில் கருத்து தெரி­வித்த ஐரோப்­பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலை­தீ­வு­க­ளுக்­கான வதி­விட பிர­தி­நிதி போல் கொட்­பிரி, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லுகை கிடைத்­ததன் பின்னர் இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள கள­நிலை­வ­ரங்­களை ஆராய்­வ­தற்­கென ஐரோப்­பிய ஒன்றியத்தின் ஐந்து பேர் அடங்­கிய குழு செப்­டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை இலங்­கையில் தங்­கி­யி­ருந்து முதற்­கட்ட கணிப்­பீ­டுகள் தொடர்பில் ஆராயும்.

 ஐரோப்­பிய ஒன்றியத்தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு இலங்­கைக்கு வழங்­கப்­பட்ட ஜி. எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லுகை தொடர்­பான 27 நிபந்­த­னை­களை இலங்கை எந்­த­ளவு செயற்­ப­டுத்தி காட்­டி­யுள்­ளது என்­பது தொடர்பில் இவ்­வி­ஜ­யத்­தின்­போது அதிக கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது.

இலங்கை மிக முக்­கி­ய­மாக அமுல்­ப­டுத்­திக்­காட்­டு­வ­தாக உறு­தி­ய­ளித்த உறுப்­பு­ரைகள் மற்றும் அமு­லாக்கம் தொடர்பில் அர­சாங்­கத்தின் முக்­கிய தரப்­பு­க­ளுடன் ஐரோப்­பிய ஒன்றியத்தின் ஐந்து பேர் அடங்­கிய குழு பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ளது. 

சர்­வ­தேச தர­நிர்­ண­யங்­க­ளுக்­கேற்ப கைச்­சாத்­தி­டப்­பட்ட ஒப்­பந்தம் தொடர்­பான அனைத்து செயற்­திட்­டங்­க­ளையும் இதன்­போது ஐரோப்­பிய ஒன்றியத்தின் குழு­விடம் இலங்கை அறிமு­கப்­ப­டுத்தும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

ஜி.எஸ்.பி வரிச்­ச­லு­கையின் பின்னர் இலங்­கையின் ஏற்­று­மதி பொருட்­க­ளுக்கு ஐரோப்­பிய ஒன்றியம் வரு­ட­மொன்­றுக்கு 2.6 பில்­லியன் யூரோக்­களை வழங்­கு­கின்­றது. இதன்­படி இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒருமுறை இலங்கை தொடர்பான திறனாய்வு கணிப்புக்களையும் இலங்கை மேற்கொள்ளும்.  அதன்படி முதலாவது கண்காணிப்பை 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதமும் இரண்டாவது கண்காணிப்பை 2020 ஆண்டும் மேற்கொள்ளவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53