சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனத்தின் அணியினர் இலங்கை பயிற்சி மற்றும் அபிவிருத்தி கல்வியகத்தினால் அண்மையில் ஒழுங்கு செய்யப்பட்ட SLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் 2015 இல் தங்க விருதை தனதாக்கிக் கொண்டனர்.

பெருமைக்குரிய பல விருதுகளை வென்றுள்ள CDB நிறுவனத்தின் அணியினர் வருடந்தோறும் தாம் நிதிச்சேவைகள் துறை மற்றும் பொதுத்துறையின் பெருநிறுவனப் பிரிவு ஆகிய இரு பிரிவுகளிலும் வல்லமைமிக்க சக்தி என்பதை நிரூபனம் செய்து வருகின்றனர்.

CDB இன் வெற்றி அணியினர் அதன் மக்களின் திறன், அறிவு, திறமைகள் மற்றும் தேர்ச்சி ஆகியவற்றுக்கு உகந்த விரிவான மூலோபாய உத்திகளின் அடிப்படையில் மக்கள் மேம்பாட்டு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.CDB ஆனது அதன் மக்கள் அபிவிருத்தி திட்டங்களை மேம்படுத்தி வருவது 2013 ஆம் ஆண்டில் வெண்கல விருதும், 2014 ஆம் ஆண்டில் வெள்ளி விருதும், இந்த வருடம் தங்க விருதும் வென்றுள்ளதன் மூலம் நிரூபனம் ஆகிறது.

‘நாம் எப்போதும் மக்கள் உணர்வு கொண்ட நிறுவனமாக இருந்துள்ளோம். சேவை துறையில் இருப்பதால் எமது வணிக நிலையாண்மையின் ஊக்கிகளாக எமது மக்களே காணப்படுகின்றனர். இதனை உறுதி செய்யும் வகையில் எமது இலக்குகளின் போது எமது ஆற்றலை அதிகரித்துக் கொள்வது பொறுப்பு என்பதை நாம் நன்குணர்ந்துள்ளோம். நிறுவனத்தின் இலக்குகள் மற்றும் CDB இன் தொலைநோக்கு பார்வையுடன் தனிநபரின தொழில் அபிலாஷைகளுடன் சீராக்கப்பட்ட CDB இன் பயிற்சி மற்றும் அபிவிருத்தி மூலோபாயங்கள் மிகவும் பிரத்தியேகமானதாக காணப்படுகின்றன’ என CDB இன் பணிப்பாளரும்ஃபிரதம செயற்பாட்டு அதிகாரியுமான ரொஷான் அபேகுணவர்தன தெரிவித்தார்.

‘சிறந்த முகாமைத்துவ முறைமை மற்றும் செயற்திறன் அடிப்படையிலான விரிவான தொழில்நுட்பம் ஆகியன இந்த விருதை அங்கீகரிப்பதற்கான ஒருங்கிணைந்த தளமாக உருவாக்கப்பட்டிருந்தது. இதற்கு மேலதிகமாக, பல்வேறு குழு மட்டங்கள் மற்றும் தொடர்ச்சியான ஈடுபாடு மூலமாக பரந்தளவில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை பொருத்தமான பயிற்சி மற்றும் அபிவிருத்தி முயற்சிகள் ஊடாக CDB உறுதி செய்கிறது.

எமது நிறுவனத்தின் உத்திகள், குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்களுக்கான கூட்டு உரித்துடமையை இது உறுதிப்படுத்துகிறது” என மேலும் அபேகுணவர்தன தெரிவித்தார். 

CDB நிறுவனம் பல்வேறு விருதுகளை வென்று தேசத்தில் நிலையான வர்த்தக குறியீடு எனும் நாமத்தை பெற்றுக் கொண்டுள்ளது. CDB நிறுவனம் தற்போது நிதிச்சேவைகள் துறையில் அதன் பிரசன்னம், உருவம் மற்றும் வர்த்தக குறியீடு ஆகியவற்றில் அதிகம் விரும்பப்படும் தொழில் நிறுவனம் எனும் நிலையை அடைந்துள்ளனர்.

“தொடர்ச்சியான உருவாக்கம் காரணமாக எமது தொழிற்துறை உயர் போட்டிகரமானதாக விளங்குகிறது” என அபேகுணவர்தன சுட்டிக்காட்டினார். “எம்மைப் போன்ற நிறுவனங்கள் எமது வர்த்தகம் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய உலக, உள்நாட்டு மற்றும் தொழில் ரீதியாக ஏற்படும் எந்தவொரு அவசர நிலைமைகளையும் சமாளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டியமை கட்டாயம் என்பதை இது தெளிவுபடுத்துகிறது.

எமது செயல்பாடுகளின் முக்கிய நோக்கான எமது நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கக்கூடிய வகையில் எமது வெற்றி அணியினரை நாம் மேம்படுத்தியுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.