உயர்மட்ட அமெரிக்க பிரதிநிதி இலங்கை வரவுள்ளார்.!

Published By: Robert

27 Aug, 2017 | 04:48 PM
image

(ஆர்.யசி)

தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்காவின் பதில் உதவி ராஜாங்க செயலாளர் மற்றும் ஆப்கானிஸ்தான்,பாக்கிஸ்தானுக்கான பதில் விசேட பிரதிநிதியாக செயற்படும் எலிஸ் வெல்ஸ் அம்மையார் அடுத்தவாரம்  இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

இதன்போது இலங்கையின் அரசியல், சிவில் மற்றும் பாதுகாப்பு தரப்புடன் முக்கிய சந்திப்புகளையும் நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்காவின் பதில் உதவி ராஜாங்க செயலாளர் மற்றும் ஆப்கானிஸ்தான்,பாக்கிஸ்தானுக்கான பதில் விசேட பிரதிநிதியாக செயற்படும்  உதவி ராஜாங்க செயலாளர் எலிஸ் வெல்ஸ் அம்மையார் அண்மைக்காலமாக  ஆசிய நாடுகளுக்கான விஜயத்தினை முன்னெடுத்துள்ள நிலையில், அதன் ஒரு கட்டமாகஅடுத்தவாரம்  அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்மாதம்  31 ஆம் திகதி இந்து சமுத்திர மாநாடு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.இதற்கமைய இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் வகையில் எலிஸ் வெல்ஸ் அம்மையார் எதிர்வரும் முதலாம் திகதி  இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். 

இந்து சமுத்திர வலய நாடுகளில் சமாதானம் அபிவிருத்தி மற்றும் செழிப்பு ஏற்படுவது குறித்த இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளது. இதன்போது 17 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க உயர் மட்ட பிரதிநிதி எலிஸ் வெல்ஸ் அம்மையார் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், வர்த்தகர்கள் மற்றும் கசிவில் சமூகங்களின் தலைவர்களை சந்திக்கவுள்ளதுடன் இலங்கை பாதுகாப்பு தரப்பையும் சந்தித்து ஆலோசனைகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27