வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக மாராவில பொலிஸார் தெரிவித்தனர். 

நாத்தாண்டி குளியாபிட்டி வீதியில் வசிக்கும் அஜித் விஜேசூரிய என்பவர் சம்பவம் தொடர்பில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ கொளுஞ்சாவாடி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாத தினமொன்றில் சைப்ரஸ் நாட்டில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி தன்னிடம் 6 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டதாகவும், அதன் பின்னர் உறுதியளித்த பிரகாரம் தனக்கு சைப்ரஸ் நாட்டில் தொழில் பெற்றுத் தரவில்லை எனவும், பின்னர் தான் வழங்கிய பணத்தைத் திருப்பிக் கேட்டபோதும் பணத்தையும் திருப்பித் தராது மோசடி செய்ததாகவும் முறைப்பாட்டாளர் சம்பவம் தொடர்பில் மாராவில பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இம்முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், மாரவில பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(மதுரங்குளி நிருபர்)