சுந்தர் சி எப்போதும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது? திரையுலக ரசிகர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்பதை கூர்ந்து கவனித்து தன் படத்தை இயக்கக்கூடியவர். தன் கனவு  படமான சங்கமித்ராவிற்காக தயாராகிக் கொண்டிருந்தார். ஆனால் இடையில் தொய்வு ஏற்படஎன்ன செய்வது என்று யோசித்திருக்கிறார்.

தன்னுடைய இயக்கத்தில் உருவான கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவது அல்லது தயாரிப்பது என்ற முடிவிற்கு வந்திருக்கிறார். ஹிப் பொப் ஆதி தமிழாவின் ரசிகர்களைப் பற்றி நன்கு தெரிந்து கொண்ட சுந்தர்சி ‘மீசைய முறுக்கு ’என்று அவருக்கு படம் கொடுத்து, அவரை நாயகனாகவும், இயக்குநராகவும் ஆக்கி நல்ல லாபம் பார்த்துவிட்டார்.

அதே போல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து ஏராளமான ரசிகர்களை வசப்படுத்தியிருக்கும் நடிகை ஓவியாவின் புகழையும் காசாக்கும் நோக்கத்தில் கலகலப்பு படத்தின் பணிகளை தொடங்கியிருக்கிறார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் வலம் வரும் இயக்குநர் சுந்தர்சியின் சமயோசித அறிவை திரையுலகினர் பாராட்டுகிறார்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்