இலங்கை ­- இந்தியா மோதும் தீர்மானமிக்க போட்டி இன்று

Published By: Robert

27 Aug, 2017 | 09:12 AM
image

இலங்கை மற்றும் இந்­திய அணிகள் மோதும் தீர்­மா­ன­மிக்க மூன்­றா­வது சர்­வ­தேச ஒருநாள் போட்டி இன்று பல்­லே­கலை சர்­வ­தேச கிரிக்கெட் மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. பக­லி­ரவுப் போட்­டி­யாக நடை­பெ­ற­வுள்ள இப்­போட்டி இன்று பிற்­பகல் 2.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

5 போட்­டிகள் கொண்ட இப்­போட்டித் தொடரை இலங்கை அணி இழக்­காமல் இருக்க வேண்­டு­மானால்,  இப்­போட்­டியில் வெற்றி பெற வேண்­டிய கட்­டா­யத்தில் உள்­ளது. 

குறிப்­பிட்ட நேர த்திற்குள் பந்­து­ வீ­சாத குற்­றத்­துக்­காக இலங்கை அணித்­த­லைவர் உபுல் தரங்க 2 போட்­டிகள் தடையை எதிர்­கொண்­டுள்ள கார­ணத்தால், அடுத்­து­வரும் இரு போட்­டி­க­ளுக்கு சாமர கப்­பு­கெ­தர அணித்­த­லை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் கால்­ப­தித்த சாமர கப்­பு‍­கெ­தர 100 ஆவது சர்­வ­தேச ஒருநாள் போட்­டியில் விளை­யா­டி­யி­ருந்தார். எனினும் இலங்கை அணிக்கு தலைமை பொறுப்பு ஏற்­கின்­றமை இதுவே முதற்­த­ட­வை­யாகும்.

தரங்­க­வுக்கு தடை விதிப்பு,  தனுஷ்க குண­தி­லக்­க­வுக்கு காயம் ஏற்­பட்­டுள்­ளதால் இவர்­க­ளுக்கு பதி­லாக இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்­க­ளாக தி‍னேஷ் சந்­திமால், லஹிரு திரி­மான்ன ஆகியோர் இணைக்­கப்­பட்­டுள்­ளனர்.

5 போட்­டிகள் தொடரில் 2 – 0 என்ற கணக்கில் இந்­தியா முன்­னி­லையில் உள்­ளது. இன்று நடை­பெறும் போட்­டியில் இந்­திய அணியை விடவும் இலங்கை அணி  வெற்றி கொள்­வ­தற்கு முயற்­சிக்கும்.எனினும், பலம்­பொ­ருந்­திய இந்­திய அணியை வெற்­றி­கொள்­வ­தென்­பது இல­கு­வான காரி­ய­மல்ல. 

ஏனெனில், துடுப்­பாட்டம், பந்­து­வீச்சு  களத்­த­டுப்பு என அனைத்து துறை­க­ளிலும் இலங்கை அணியை விடவும் இந்­திய அணி முன்­னி­லையில் உள்­ளது. இரண்­டா­வது ஒருநாள் போட்­டியில் இந்­திய துடுப்­பாட்ட வீரர்­க­ளுக்கு சவா­லாக விளங்­கிய இளம் சுழற்­பந்­து­வீச்­சா­ள­ரான அகில தனஞ்­சய இப்­போட்­டியில் இந்­தியத் துடுப்­பாட்ட வீரர்­க­ளுக்கு சவா­லாக விளங்­குவார்.மேலும், அனு­பவ வீரர்­க­ளான சந்­திமால், திரி­மான்ன ஆகி­யோரின் வருகை இலங்கை அணிக்கு புது ­உத்­வே­கத்தை அளிக்கும்.  குறிப்­பாக 19 மாதங்­க­ளுக்கு பிறகு சர்­வ­தேச ஒருநாள் போட்­டியில் விளை­யா­ட­வுள்ள திரி­மான்ன இன்­றைய போட்­டியில் ஆரம்ப வீர­ராக கள­மி­றங்­குவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. லசித் மாலிங்க பந்துவீச்சில் தொடர்ந்து சோபிக்கத் தவறி வருகிறார். அவரும் தனது சிறந்த ஆட்டத்திறனுக்கு திரும்பும் பட்சத்தில் இலங்கை அணி இப்போட்டியில் வெற்றி பெறும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05