அமெரிக்காவில் வீசிய கடும் சூறாவளியில் அமெரிக்காவில் வாழும் இலங்கையர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அங்குள்ள இலங்கைக்கான தூதரகத்தை தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 110 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசியுள்ளது.

இந்தநிலையில் குறித்த பகுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அங்கிருக்கும் இலங்கைத் தூதரகத்தை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.