இலங்கை கடற்படையின் 21 ஆவது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இருவர்களுக்குமிடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

வைஸ் அட்மிரல் சின்னையா கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் பிரதமருடன் மேற்கொன்டுள்ள முதலாவது உத்தியோகபூர்வமான சந்திப்பாகும்.

இதன்போது பிரதமர் தனது வாழ்த்துக்களை கடற்படைத் தளபதிக்கு தெரிவித்துள்ளார். 

இருவரிடையேயும் சிநேகபூர்வமாக கலந்துரையாடப்பட்டதுடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் கடற்படை தளபதியினால் பிரதமருக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.