இலங்கை அணி மீது பாகிஸ்­தானில் 2009ஆம் ஆண்டில் வைத்து பயங்­க­ர­வாத தாக்­குதல் நடத்­தப்­பட்டது. இந்தத் தாக்­கு­த­லுக்குப் பிறகு சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யாடும் நாடுகள் பாகிஸ்­தா­னுக்குச் சென்று விளை­யாட மறுத்­தன. பாகிஸ்தான் அணி கிரிக்கெட் நிர்­வா­கமும், தங்­க­ளது போட்­டி­களை ஐக்­கிய அரபு எமிரேட்ஸில் நடத்­திக்­கொண்­டி­ருந்­தது. 

பாகிஸ்தான் கிரிக்­கெட்டின் எதிர்­கா­லத்தைக் கருத்தில் கொண்டும், அந்­நாட்டில் இருக்கும் பாது­காப்பு பிரச்­சி­னைகள் குறித்த கேள்­வி­களை களையும் வித­மா­கவும், பல்­வேறு நாடு­களைச் சேர்ந்த வீரர்­களைக் கொண்டு உரு­வாக்­கப்­பட்ட 'உலக பதி­னொ­ருவர்' (வேர்ல்ட் லெவன்)அணி, பாகிஸ்­தானில் சுற்­றுப்­ப­யணம் செய்து 3 இரு­ப­துக்கு இரு­ப­து  போட்­டி­களில் விளை­யாட இருக்­கி­றது.

பாகிஸ்­தா­னுடன் விளை­யா­ட­வி­ருக்கும் உலக லெவன் அணி அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. 

தென்­னா­பி­ரிக்க அணியின் தற்­போ­தைய தலைவர் டு பிளெஸிஸ் 'உலக லெவன்' அணிக்குக் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இலங்கை அணி­யி­லி­ருந்து திஸர பெரேரா இந்தத் தொடரில் விளை­யா­டு­கிறார். இந்தப் போட்­டிகள் எதிர்­வரும் செப்­டம்பர் மாதம் 12, 13 மற் றும் 15 ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்­ளது. 

உலக லெவன் அணி,

டு பிளெஸிஸ் (தெ.ஆ), அம்லா (தெ.ஆ.), சாமுவேல் பத்ரி (மே.இ.தீ), ஜார்ஜ் பெய்லி (ஆஸி.), கொலிங்வுட் (இங்­கி­லாந்து), பென் கட்டிங் (ஆஸி.), கிராண்ட் எலியாட் (நியூஸி.), தமீம் இக்பால் (பங்களாதேஷ்), டேவிட் மில்லர் (தெ.ஆ.), மோர்னே மோர்கல் (தெ.ஆ.), டிம் பைன் (ஆஸி.), திஸர பெரேரா (இலங்கை), இம்ரான் தாஹிர் (தெ.ஆ.), டேரன் சமி (மே.இ.தீ.).