முன்னாள் ஜனா­தி­ப­தி­யினால் அமுல்­ப­டுத்­தப்பட்ட சட்­டங்­க­ளுக்கு மாறாக அவரே செயற்­ப­டு­கின்றார் : திஸா­நா­யக்க

Published By: Digital Desk 7

26 Aug, 2017 | 12:23 PM
image

ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்சி உறுப்­பினர் ஒருவர் ஜனா­தி­ப­தி­யாகும் பட்­சத்தில் அவ­ருக்கு கட்­சியின் தலை­மைப்­ப­தவி வழங்­கப்­பட வேண்டும் என்ற திருத்­தத்தினை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவே நடை­மு­றைப்­ப­டுத்­தினார்.

ஆனால் இன்று அவரின் செயற்­பா­டுகள் அந்த நடை­மு­றைக்கு மாறா­கவே அமைந்­துள்­ள­தாக சமூக வலு­வூட்டல் மற்றும் நலன்­புரி அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

பத்­த­ர­முல்லை செத்­சி­ரி­யா­யவில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­க­ளாக இருந்த பலர் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் கட்­சி­யி­லி­ருந்து விலகிச் சென்­றுள்­ளார்கள். குறிப்பாக கட்­சியின் செய­லா­ள­ராக இருந்த மைத்­தி­ரி­பால சேனா­நா­யக்க, சூரி­ய­ராச்சி, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க, அனுர பண்­டா­ர­நா­யக்க உள்­ளிட்டோர் கட்­சியை விட்டுச் சென்­றி­ருந்­தார்கள்.

அதன் பின்னர் அவர்கள் அனை­வரும் கட்சியின் தலை­மைத்­து­வத்­தினால் விலக்­கப்­பட்டு மீண்டும் கட்­சிக்­குள் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டார்கள். அந்த வரி­சையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவும்  உள்ளார். அவ்­வாறான முக்­கி­யஸ்­தர்­களின் விலகல் என்ற சவால்­க­ளையும் கடந்துசென்­றுதான் நாம் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­கவை  வெற்­றி­பெ­ற­வைத்து கட்­சியை மீட்­டெ­டுத்தோம். 

அந்த வெற்­றியின் பல­னா­கத்தான் இன்றும் ஜனா­தி­பதி பதவி சுதந்­திர கட்­சி­யினர் வச­மா­கவே உள்­ளது. அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு தேர்­தலின் போது பொது வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அவர் அன்னச் சின்­னத்தில் போட்­டி­யிட்­டதால் சுயேட்­சையா செயற்­ப­டுவார் என்று கரு­தினோம். 

ஆனால் அமைச்சர் மஹிந்த அம­ர­வீர ஊடாக புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு பேச்­சு­வார்த்­தைக்கு அழைப்பு விடுத்­தி­ருந்தார் அப்­போது கட்­சியின் முக்­கியஸ்­தர்கள் அனை­வரும் முன்னாள் சபா­நா­யகர் சமல் ராஜ­பக்ஷவின் வீட்டில் சந்­திப்பை நடத்­தினோம்.

அப்­போ­துதான் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு தலை­மைத்­து­வத்தை வழங்க இணக்கம் தெரி­வித்­தி­ருந்தார். அதன் பின்னர் அவர் கட்­சியின் ஆலோ­ச­க­ராக இருக்­கவும் இணக்கம் தெரி­வித்தார். கட்­சியின் புதிய தலை­வ­ரான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கீழ் நடத்­தப்­பட்ட முத­லா­வது மாநாட்டில் இருவரும் ஒரே­மே­டையில் அமர்ந்­தி­ருந்­தார்கள். 

அவ்­வா­றான நிலை­மை­களை கடந்து வந்துள்ள நிலையில் கட்­சியில் ஒரு தரப்­பினர் பிரிந்து செல்லும் போதும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அவர்­க­ளுடன் ஒரு­மித்து செயற்­பட விரும்­பு­கின்றோம் என்றே பகி­ரங்­க­மாக கூறினார்.

இவ்­வா­றான நிலை­மை­களின் பின்­னர்தான் தற்போது முன்னாள் ஜனா­திபதி மஹிந்த ராஜ­பக்ஷ கட்­சியின் தலைவர் தானே என கூறுகின்றார். எவ்­வா­றா­யினும் சுதந்­திர கட்சி அநா­வ­சிய மோதல்­களை தவிர்த்து முன்­னேற்றம் அடை­வ­தையே நாங்கள் விரும்­பு­கின்றோம். அதனால் நாடுதான் பய­ன­டையும் என்­பதை சக­லரும் உணர்ந்­து­கொள்ள வேண்டும்.

அதேநேரம் கட்சியின் அங்கத்தவர் ஒருவர் ஜனாதிபதியாகும் பட்சத்தில் அவர் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பார். அதுவரையில் தலைவராக இருந்தவர் கட்சியின் ஆலோசகர் ஆவார் என்ற திருத்தத்தினையும் கட்சியின் சட்டதிட்டங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே கொண்டுவந்திருந்தார் என்பதையும் அவர் மறந்துவிடக்கூடாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08