அமைச்சர் அர்­ஜுன மீதான மான நஷ்ட வழக்கு தள்­ளு­படி

Published By: Digital Desk 7

26 Aug, 2017 | 12:10 PM
image

பெற்­றோ­லிய வள அபி­வி­ருத்தி அமைச்சர் அர்­ஜுன ரண­துங்­க­விற்கு எதி­ராக கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சும­தி­பா­ல­வினால் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த மானநஷ்ட வழக்­கினை நுகே­கொடை நீதிமன்றம் தள்­ளு­படி செய்­துள்­ளது.

அமைச்சர்  அர்ஜுன ரண­துங்கவுக்கு எதி­ராக மான­நஷ்ட வழக்­கொன்றை திலங்க சும­தி­பால நுகே­கொடை நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­தி­ருந்தார்.  

இவ்­வ­ழக்கு நேற்று  விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போதே தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்­ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி அமைச்சர் அர்­ஜு­ன­வுக்கு எதி­ராக கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சும­தி­பா­ல­வினால் இவ்­வ­ழக்கு நுகே­கொடை நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்டது.  2003ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர்கள் சந்­திப்­பின்­போது அமைச்சர் அர்ஜுன ரண­துங்க தனது நற்­பெ­ய­ருக்கு களங்கம் விளை­விக்கும் வகையில் பேசினார் என்ற குற்­றச்­சாட்டை முன்­வைத்து இந்த வழக்கை தாக்கல் செய்­தி­ருந்தார். 

'திலங்க சும­தி­பால ஊழல்­வாதி. நான் அவ்­வா­றான நபர்­க­ளுடன் சேர்ந்து எமது நாட்டு கிரிக்கெட் துறையை அபி­வி­ருத்தி செய்­ய­மு­டி­யாது. திலங்க மீது ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளன. 

அது தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்கள்  நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் குற்­றச்­சாட்­டுக்கள் காணப்­ப­டு­கின்­றன. திலங்க டெலிகொம் நிறு­வ­னத்­துக்கு தலை­வ­ராக இருக்­க­மு­டி­யாது' என அமைச்சர் அர்ஜுன ரண­துங்க கூறி­யி­ருந்தார்.

அதனால்  500 மில்­லியன் ரூபா நஷ்டஈடு வழங்­கு­மாறு கோரியே மானநஷ்ட வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சார்பில்  சட்டத்தரணி அதுல பண்டார ஹேரத் மற்றும் சஸிகா டீ சில்வா ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53