புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு  பேருவளை சீனன் கோட்டை ஸ்டேடியம் கிரிக்கெட் கழகம் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 3ஆம் திகதி மு.ப 8.30 மணிக்கு நளீம் ஹாஜியார் விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

அணிக்கு 11 பேர் கொண்ட இப் போட்டியில் சுமார் 32 அணிகள் பங்குபற்றுவதாகவும் இறுதிப்போட்டிகள் எதிர்வரும் 6, 9, 17ஆம் திகதிகளில் நடைபெறும் என கழக தலைவர் றிகாஸ் சாலி தெரிவித்துள்ளார்.