தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதா? இல்லையா?

Published By: Digital Desk 7

26 Aug, 2017 | 10:40 AM
image

தேசிய அர­சாங்­கத்தை தொடர்­வதா? இல்­லையா? என்­பதை எதிர்­வரும்  டிசம்பர் மாதம் 31 ஆம்­தி­கதி ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி தீர்­மா­னிக்கும். இந்த நிலைப்­பாட்­டி­லேயே ஜனா­தி­ப­தியும் இருக்­கின்றார் என ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். 

இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்து இரண்டு வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்ற நிலையில் தேசிய  அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் தொடர்பில் திருப்தி அடைய முடி­யுமா? என வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

டிலான் பெரேரா இந்த விடயம் தொடர்பில்  மேலும் குறிப்­பி­டு­கையில்,

நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்டு இரண்டு வரு­டங்கள் கடந்­து­விட்­ட­போ­திலும் எதிர்­வரும் டிசம்பர் மாதம் 31 ஆம்­ தி­க­தியே நாம் இது­ தொ­டர்பில் இறு­தித்­தீர்­மானம் எடுக்­க­வுள்ளோம். இந்த நிலைப்­பாட்­டி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் இருக்­கின்றார். 

குறிப்­பாக டிசம்பர் மாதம் 31 ஆம் ­தி­கதி ஆகும் போது கடந்த இரண்டு வரு­டங்­களில் நாம் எதனை சாதித்தோம் என்­பதை மீளாய்வு செய்வோம். அதன் பின்னர் தேசிய அர­சாங்­கத்தை நீடிப்­பதா? இல்லையா? என்­பதை தீர்­மா­னிப்போம். விசே­ட­மாக தற்­போ­தைய நிலை­மையில் எங்­களால் சில விட­யங்­களில் திருப்­தி­ய­டைய முடி­யு­மாக உள்­ளது. அதா­வது உள்­ளூ­ராட்சி தேர்தல் தொடர்­பான திருத்த சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இது ஒரு மிகப்­பெ­ரிய விட­ய­மாகும். தற்­போது தேர்­தலை நடத்­த­மு­டியும். அதே­போன்று அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டு­களும் இடம்­பெற்று வரு­கின்­றன. 

அதா­வது ஆகஸ்ட் மாதம் 31 ஆம்­தி­க­திக்கு முன்னர் பிர­தான கட்­சிகள் தமது யோச­னை­களை முன்­வைக்­க­வேண்­டு­மென அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­மூலம் விரை­வாக நல்­லது நடக்கும் என நம்­பு­கின்றோம். விசே­ட­மாக தேர்தல் முறை மாற்றம் மற்றும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு என்­ப­வற்றை விரைவில் எதிர்­பார்­க்கின்றோம். ஒரு­சில விட­யங்­களில் எங்­க­ளுக்கு திருப்தி இல்­லாத நிலை காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக ஊழல் மோசடி விவ­கா­ரங்­களில் நாம் திருப்­தி­ய­டைய முடி­யாது. ஆனால் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கல் விட­யத்தில் நல்ல விட­யங்கள் இடம்­பெற்­றுள்­ளன. 

எனவே டிசம்பர் மாதம் 31 ஆம்­தி­கதி ஆகும் போது இந்த விடயங்களில் சிறந்ததொரு  பெறுபேறை எதிர்பார்க்கின்றோம்.  அதன் போது எமக்கு திருப்தி ஏற்படாவிடின் தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதா இல்லை யா என்பதை தீர்மானிக்கவேண்டிய  கட்டாயத்திற்குள் தள்ளப்படுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56