வவுனியா, காளிகோயில் வீதியில் குடும்பஸ்தர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேரை வவுனியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வவுனியா காளிகோவில் வீதியில் கடந்த 21 ஆம் திகதி இரவு 11 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார், வவுனியாவைச் சேர்ந்த 20 தொடக்கம் 28 வயதுடைய 6 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீது பல முறைப்பாடுகள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் காணப்படுவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.