இலங்கையின் 21ஆவது கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அத்மிரல் ட்ரவிஸ் சின்னையா இன்று கண்டி தலதா மாளிகையில் சமய அனுஷ்ட்டானங்களில் ஈடுபட்டதன் பின்னர் மல்வது மற்றும் மஹா நாயக்க தேரர்களின் கால்கலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

கடற்படைத் தளபதி அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆசிர்வாதம் பெறுவற்கு முன்னர் தலதா மாளிகையின் நிலமேயை சந்தித்து நட்புரையாடலில் ஈடுபட்டார்.

பின்னர் அஸ்கிரிய பீடாதிபதிகளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். இதன் போது பீடாதிபதிகள் புதிய உயர்பதவிகளை பொறுப்பேற்று எவ்வாறு நடத்திச் செல்ல வேண்டும் என சுருக்கமான அறிவுரையை வழங்கி தளபதி தன் பணிகளை நீதியோடும் நேர்மையோடும் நடாத்திச் செல்ல வலிமை கிடைக்க வேண்டும் என ஆசிர்வதித்தனர்.