இந்திய அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டிக்கு தலைவராக கப்புகெதர நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய 2 ஆவது ஒருநாள் போட்டியில் 3 ஓவர்கள் தமதமாக பந்துவீசியமைக்காக இலங்கை அணியின் ஒருநாள் தலைவர் உப்புல் தரங்கவுக்கு 2 போட்டிகள் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் கப்புகெதரவுக்கு தலைமைப்பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டெஸ்ட் அணியின் தலைவர் டினேஸ் சந்திமல் மற்றும் திரிமன்னே ஆகியோர் அணிக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.

தனுஷ்க குணதிலக்க 2 போட்டியின் போது களத்தடுப்பில் ஈடுபட்டவேளை ஏற்பட்ட உபாதையால் குணமாகுவதற்கு 10 நாட்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவது போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமாகக் கருதப்படுவதால் போட்டி விறுவிறுப்பாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.