பம்பரக்கலையில் பற்றி எரிந்த லய தொடர் வீடுகளுக்கு இதுவரை விமோர்சனம் இல்லை : மக்கள் அங்கலாய்ப்பு

Published By: Robert

25 Jan, 2016 | 11:40 AM
image

(க.கிஷாந்தன்)

மலையகத்தில் கடந்த காலங்களில் பத்துக்கும் அதிகமான தீ விபத்துக்கள் தொழிலாளர்கள் வாழும் லயன் தொடர் குடியிருப்புகளில் ஏற்பட்டுள்ளது.

இத்தீ விபத்துக்கள் பொதுவாக மின்சாரம் ஒழுங்கீனம் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக அவ்வப்பகுதி பொலிஸ் நிலையங்களில் பதியப்பட்டுள்ளது.

இந்த வகையில் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை குட்டிமலை எனும் தோட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தீப்பற்றி முற்றாக எரிந்த லய தொடர் குடியிருப்பில் வாழ்ந்து வந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு இதுவரை வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றார்கள்.

தீ விபத்து ஏற்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் வாழ்வதற்காக தற்காலிகமாக குடிமனைகளை அமைத்து வசித்து வருகின்ற இந்த தொழிலாளர்கள் எவ்விதமான வீட்டு சடங்குகளையும் மேற்கொள்ள முடியாத துர்ப்பாகிய நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளனர்.

கால் நீட்டி நித்திரைக்கொள்ள முடியாத அளவிலான தற்காலிக குடிமனைகளை தோட்ட நிர்வாகத்தின் உதவியுடன் அமைத்துக் கொண்டு வாழும் இந்த மக்கள் தங்களுடைய பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைளை கூட  முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.

அத்தோடு பருவம் அடைந்த பெண் பிள்ளைகளை பராமரிக்கும் சூழ்நிலைகளை இழந்துள்ள நிலையில் திருமணம் வயதுக்குட்பட்ட ஆண், பெண் பிள்ளைகளுக்கு உரிய வேளையில் திருமண வைபவங்களை நிகழ்த்த முடியாத அவல நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலப்பகுதிகளில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வாழ்கின்ற குடியிருப்பாளர்களுக்கு புதிய கிராம உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக அமைத்துக் கொடுத்து வரப்படும் புதிய வீடமைப்பு திட்டத்தில் குட்டிமலை தொழிலாளர்களும் உள்வாங்கப்பட்டு மழுங்கடிக்கப்பட்ட உரிமையில் இருந்து மீட்டெடுக்க வழிசமைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இத்தோட்ட தொழிலாளர்கள் அங்கலாகின்றனர்.

இவர்களின் நிலை உணர்ந்து விரைவில் தனி வீடுகளை அமைத்து இவர்களின் வசிப்பிட உரிமையை மலையக தமிழ் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் பாதிக்கப்பட்ட 20 குடியிருப்பளார்களை சேர்ந்த 100ற்கும் அதிகமானோர் இன்று தற்காலிக குடிமனைகளில் அனுபவிக்கும் குடிநீர் பிரச்சினை, மின்சார ஒழுங்கீன பிரச்சினை மற்றும் ஏனைய அடிப்படை பிரச்சினைகளிலிருந்து விடுப்பட்டு வாழக்கூடிய நிலை உருவாகும் என்பது குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08