ஹட்டன் பஸ்தரிப்பு நிலையத்தில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலம் ஒன்றை ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர். 

death body

இன்று பகல் 2.30 மணியளவில் ஹட்டன் பஸ்தரிப்பு நிலையத்தில் அமர்ந்திருந்தவாறு ஒருவர் மயங்கி கிடப்பதை கண்ட நேரக்கண்கானிப்பாளர்கள் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து ஹட்டன் பொலிஸாரினால் குறித்த நபரை டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மேற்கறிப்பிட்ட நபர் மரணமடைந்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

குறித்த நபர் மன்ராசி ஆக்ரப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் கொழும்பு செல்வதற்காக ஹட்டன் பஸ்தரிப்பிடத்தில் அமர்ந்திருந்த நிலையில் மரணமாகியுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

சடலம் பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான மேலதிக விசாரணையை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.