காதலியை தன்னோடு வருமாறு அழைத்து அவர் தன்னுடன் வர மறுத்த காரணத்தால் 40 வயது காதலர் தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தங்கொட்டுவ, யோகியான பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய குணதிலக என்பவர் தனது மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

குறித்த நபர் தான் தொழில் புரியும் ஓட்டுதொழிற்சாலை நிலையமொன்றில் பணிபுரியும் பெண் ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.

இந் நிலையில் தனது காதலி தொழிற்புரியும் ஓட்டுதொழிற்சாலைக்கு சென்று பணிபுரிந்துகொண்டிருந்த காதலியை தன்னோடு வருமாறு அழைக்க காதலி மறுத்துள்ளார்.

காதலியின் மறுப்பை தாங்கிக்கொள்ள முடியாத காதலர் அதே இடத்தில் தனக்குத் தானே தீ வைத்துகொண்டுள்ளார்.

தீ வைத்துக்கொண்ட காதலரை ஓட்டுத் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த சிலர் தீயை அணைத்து மாரவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வந்த குறித்த நபர் சிசிக்சை பலனளிக்காத நிலையில் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

குறித்த தற்கொலை சம்பவம் தொடர்பாக தங்கொடுவ, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.