இப்போதுள்ள முன்னணி நடிகைகளுக்கு கதை சொல்லும் போது உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்று சொல்லிப் பாருங்கள். எனக்கொன்று அவ்வளவு வயசாகவில்லை என்று சொல்லிவிட்டு, அப்படத்தில் நடிக்கவே ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஒரு சில நடிகைகள் கம்பனி, பட்ஜட், ஊதியம் ஆகியவற்றைப் பார்த்து அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள். அப்போது கூட ஒரு காட்சியில் ஓல்ட் கெட்டப் என்று சொல்லிப் பாருங்கள். அவ்வளவு தான். நடிக்க முடியாது என்று மறுத்துவிடுவார்கள். ஆனால் மலையாளத்தில் ஒரு நடிகை ஓல்ட் கெட்டப் போட்டு அசத்தியிருக்கிறார். அதாவது கமல் பாணியை பின்பற்றி பெயர் வாங்கியிருக்கிறார்.

பாக்யராஜ் நடித்த துணை முதல்வர், இணையதளம் போன்ற படங்களில் நடித்த மலையாள நடிகை ஸ்வேதா. இவர் ‘நவால் என்ன ஜ்வல் ’ என்ற படத்தில் வயதான ஆண் வேடத்தில் நடித்திருக்கிறார். அதிலும் அப்படத்தின் கதை களம் ஈரானிய சிறைச்சாலையை மையமாகக் கொண்டதாம். அவரின் கெட்டப் இணையத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

தகவல் : சென்னை அலுவலகம்