நாட்டில் ஏற்­பட்­டுள்ள கடும் வரட்­சி­யினால் 13 இலட்­சத்து 23 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

Image result for கடும் வரட்­சி virakesari

தொடர்ந்தும் வரட்­சி­யான காலநிலை நீடிக்­கு­மாயின் மக்­க­ளுக்கு  நிவா­ரண உத­வி­களை வழங்­கு­வதில் பாரிய நெருக்­க­டியை சந்­திக்க வேண்­டிய நிலை ஏற்­படும் என அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

நாட்டில் நிலவும் கடும் வரட்­சி­யான கால­நிலை தொடர்பில் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்­ளது.

அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

நாட்டில் நிலவும் கடும் வரட்­சி­யினால் 20 மாவட்­டங்­களைச் சேர்ந்­த மக்கள் பாதிப்­பு­க­ளுக்கு முகம் ­கொ­டுத்­துள்­ளனர். இதன் கார­ண­மாக 13 இலட்­சத்து 23 பேர் தற்­போது வரையில் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

யாழ்ப்­பாண மாவட்டத்தில் 1 இலட்­சத்து 28 ஆயி­ரத்து 652 பேரும், முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 1 இலட்­சத்து 15 ஆயி­ரத்து 308 பேரும், மன்னார் மாவட்­டத்தில் 1 இலட்­சத்து 15 ஆயி­ரத்து 928 பேரும், வவு­னியா மாவட்­டத்தில் 1இலட்­சத்து ஆயி­ரத்து 914 பேரும், புத்­தளம் மாவட்­டத்தில் 1இலட்­சத்து 64 ஆயி­ரத்து 463 பேரும் மாவட்ட ரீதியில் அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கு­வ­தற்­காக அர­சாங்கம் 1.5 பில்­லியன் ரூபாவை ஒதுக்­கீடு செய்­துள்­ளது. திறை­சே­ரி­யி­னூ­டாக குறித்த 1.5 பில்­லியன் ரூபா  நிதி­யினை அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சின் ஊடாக மாவட்ட செய­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இருப்­பினும் தொடர்ந்தும் வரட்­சி­யான காலநிலை நீடிக்­கு­மாயின் மக்­க­ளுக்கு நிவா­ரண உத­வி­களை வழங்­கு­வதில் பாரிய நெருக்­க­டியை சந்­திக்க வேண்­டிய நிலை ஏற்­படும். தற்­போது ஒதுக்­கப்­பட்­டுள்ள நிவா­ரண நிதி­யினை இரட்­டிப்­பாக ஒதுக்­கீடு செய்­ய­வேண்­டிய நிலை ஏற்­படும் எனவும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

வரட்­சியால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­களை ஆராய்­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன அண்­மையில் கெப்­பத்­தி­கொல்­லாவ பகு­திக்கு விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டி­ருந்த போது விடுத்த பணிப்­பு­ரைக்­க­மை­யவே குறித்த உலர் உணவு நிவா­ரணம் வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. 

இதே­வேளை புத்­தளம், குரு­நாகல், கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம், முல்­லைத்­தீவு, அனு­ரா­த­புரம், பொல­ன­றுவை, மொன­ரா­கலை ஆகிய மாவட்­டங்­களில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உலர் உணவு நிவா­ரணம் வழங்கு­வ­தற்­காக குறித்த நிதி­யி­லி­ருந்து 1.43 பில்­லியன் ரூபாய் இது­வரை பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

மேலும் மட்டக்களப்பு, திருகோண மலை, அம்பாறை, பதுளை, ஹம்பாந் தோட்டை, வவுனியா, மன்னார் மாவட்ட மக்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டிருப் பதாகவும் குறித்த மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.