கண்டி பல்­லே­க­லயில் நேற்று நடை­பெற்ற போட்­டியில் இந்­திய அணி வென்­றி­ருந்­தாலும் ஆட்ட நாயகன் விருதை வென்­றது இலங்கை அணியின் மந்­திர சுழற்­பந்­து­வீச்­சாளர் அகில தனஞ்­ச­யதான். காரணம் முக்­கி­ய­மான கட்­டத்தில் சீரான இடை­வெ­ளியில் ரோஹித் ஷர்­மாவில் ஆரம்­பித்த விக்கெட், விராட் கோஹ்லி, ராகுல், பாண்­டியா, ஜாதேவ், அக்ஸர் பட்டேல் வரை நீண்­டது. 

இலங்கை - இந்­திய அணிகள் மோதிய இரண்­டா­வது ஒருநாள் போட்டி கண்டி பல்­லே­க­லயில் நேற்று நடை­பெற்­றது. இந்­தப்­போட்­டியில் இந்­திய அணி 3 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்­றது. 

இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 50 ஓவர்­களில் 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 236 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது. 

இப் போட்டியில் இலங்கை அணியின் அகில தனஞ்­சய தனது மாயா­ஜால சுழற்பந்­து­வீச்சில் 6 விக்­கெட்­டுக்­களை கைப்­பற்றி ஒட்­டு­மொத்த கிரிக்கெட் ரசி­கர்­க­ளையும் தன்­பக்கம் திருப்­பினார்.

ஒரு­புறம் விக்­கெட்­டுகள் விழுந்­தாலும்  டோனியும், புவ­னேஷ்வர் குமாரும் போராட்­டத்தை தொடர்ந்­தனர். இந்த ஜோடி கடைசி வரை நிலைத்து நின்று விளை­யாடி இலக்கை எட்­டி­யது. 45ஆவது ஓவரில் இந்­தியா 7 விக்­கெட்­டுக்­களை இழந்து வெற்றி இலக்கை அடைந்­தது. 

இந்தப் போட்­டியில் இந்­திய அணி வெற்­றி­பெற்­றா­லும்­கூட ஒட்­டு­மொத்த ரசி­கர்­களின் பார்­வையும் இருந்­தது அகில தனஞ்­சய மீதுதான். அனை­வரும் அவரை கவ­லை­யு­டன்தான் பார்த்­தனர். காரணம் ஆறு விக்­கெட்­டுக்­களை வீழ்த்தி அதுவும் முக்­கி­ய­மான துடுப்­பாட்ட வீரர்­களின் விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தியும் இலங்கை அணியால் வெற்­றி­பெற முடி­யாமல் போய்­விட்­டதே என்­ப­துதான்.

இத்­த­னைக்கும் அகி­ல தனஞ்­சய நேற்­று­முன்­தி­னம்தான் இரவு 11 மணி­ய­ள­வில் கண்டி வந்­த­டைந்­துள்ளார். காரணம் நேற்­று­முன்­தினம் காலை­யில்தான் அவ­ருக்கு திரு­மணம் நடந்­துள்­ளது.

திரு­ம­ணத்­தன்­றுதான் அவர் அணியில் இணைக்­கப்­பட்­டுள்ளார் என்ற தகவல் கிடைத்­துள்­ளது. அதன்­பி­றகே அவர் உட­ன­டி­யாக போட்டி நடை­பெறும் கண்டி பல்­லே­கலக்கு வந்­த­டைந்­துள்ளார்.

இந்தப் போட்­டியில் இந்­தியா வென்­றி­ருந்­தாலும் ஆட்ட நாயகன் விருதை அகில தனஞ்­ச­யதான் வென்றார். ஆட்ட நாயகன் விருதை வாங்­கிய பின் அவர் பேசு­கையில்,

ஆறு விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தி­யது மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றது. ஆனால் தோற்­று­விட்­டோமே என்ற கவலை அதை­வி­டவும் இருக்­கி­றது.

வென்­றி­ருந்தால் மகிழ்ச்­சி­யாக சென்­றி­ருப்பேன். நேற்றுத்தான் ( புதன்கிழமை) நான் திருமண பந்தத்தில் இணைந்தேன். திருமண வைபவம் முடிந்தவுடன் நான் போட்டியில் பங்கேற்க இங்கு வந்து சேர்ந்தேன் என்று சொல்லி முடித்தார் சோகமாக.

நேற்றைய போட்டியில் இந்திய அணியை மிரட்டிய அகில தனஞ்சய தனது கிரிக்கெட் வாழ்க்கையிலும் இல்லற வாழ்க்கையிலும் சிறப்புற வாழ நாமும் வாழ்த்துகிறோம்.