கேப்பாப்புலவில் 111 ஏக்கர் காணிகளையும் உரித்தாளிகளுக்கு விடுவிக்க நடவடிக்கை.!

Published By: Robert

25 Aug, 2017 | 11:28 AM
image

முல்­லைத்­தீவு கேப்­பாப்­புலவில் அமைக்­கப்­பட்­டி­ருக்கும் படை­யி­னரின் கட்­ட­டங்­க­ளையும் உப­க­ர­ணங்­க­ளையும் வேறு இடத்­துக்கு மாற்­று­வ­தற்கு செல­வாகும் 148மில்­லியன் ரூபாவை செலுத்தி 111 ஏக்கர் விஸ்­தீ­ர­ண­மான காணியை விடு­விப்­ப­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் அளித்­துள்­ளது.   திறை­சே­ரி­யினால் நிதி விடு­விக்­கப்­பட்­டதும் 111ஏக்கர் காணி­க­ளையும் ஆரம்ப உரித்­தா­ளி­க­ளுக்கு உட­ன­டி­யாக விடு­விக்க திட்­ட­மிட்­டுள்ளோம் என சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்­வ­ளிப்பு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்­துள்ளார்.

Image result for டி.எம்.சுவா­மி­நாதன் virakesari

இது தொடர்­பாக அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

முல்­லைத்­தீவு கேப்­பாப்­பு­லவு கிரா­மத்தில் பாது­காப்பு தரப்­பி­னரின் பொறுப்­பி­லி­ருந்த காணி­களை விடுவிப்­ப­தற்கு பாது­காப்பு தரப்பு தமது விருப்­பத்தை வெளி­யிட்­ட­தைத்­தொ­டர்ந்து 243 ஏக்கர் தனியார் காணிகள் எவ்­வித நிதியும் பெறப்­ப­டாத நிலையில் உரித்­தா­ளி­க­ளுக்கு விடு­விக்­கப்­பட்­டன. அத்­துடன் 5 மில்­லியன் ரூபா செலுத்­திய பின்னர் கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி மேலும் 189 ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டன.

அதே­போன்று கேப்­பாப்­புலவில் 111 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் அமைந்­தி­ருக்கும் இரா­ணுவ முகாம்­களை வேறு இடத்­துக்கு இட­மாற்ற 148 மில்­லியன் ரூபா செலுத்தும் பட்­­சத்தில் அந்த காணி­களை விடு­விக்க இரா­ணு­வத்­த­ள­பதி இணக்கம் தெரி­வித்­தி­ருந்தார். அத­ன­டிப்­ப­டையில் பாது­காப்பு தரப்­பி­னரின் பொறுப்பில் இருந்த குறித்த காணி­களை விடு­வித்து அவற்றின் ஆரம்ப உரித்­தா­ளி­க­ளுக்கு வழங்கும் பிரே­ர­ணையை அண்­மையில் அமைச்­ச­ரவை அனு­ம­திக்­காக சமர்ப்­பித்­தி­ருந்தேன்.

அதன் பிர­காரம் பாது­காப்பு தரப்பு கோரி­யி­ருந்த 148 மில்­லியன் ரூபாவை செலுத்தி குறித்த காணி­களை விடு­விப்­ப­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் அளித்துள்ளது. திறைசேரியினால் குறித்த நிதி விடுவிக்கப்பட்டதும் பாதுகாப்பு தரப்புக்கு விடுவிக்கப்பட்டு, 111 ஏக்கர் காணிகளும் ஆரம்ப உரித்தாளிகளுக்கு உடனடியாக விடுவிக்க திட்டமிட்டுள்ளோம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48