புதுமாப்பிள்ளையின் சுழலில் மிரண்டு தடுமாறிய இந்திய அணியை அனுபவத்தால் வெற்றியை நோக்கி வழிநடத்திய டோனி

Published By: Priyatharshan

25 Aug, 2017 | 07:42 AM
image

இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது போட்டியில் இலங்கையின் புதுமாப்பிள்ளையான அகில தனஞ்சய சுழலில் மிரடட்ட தடுமாறிய இந்திய அணியை தனது அனுபவத்தினால் வழிநடத்திய மகேந்திர சிங் டோனி, இந்திய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி வழிவகுத்தார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2 ஆவது போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்த புதுமாப்பிள்ளை அகில தனஞ்சயவின்  சுழல் சிக்கித் தடுமாறிய இந்திய அணி, ஒரு சமயத்தில் இலங்கையிடம் தேற்கும் நிலையில் இருந்தது.

அத்தருணத்தில் களத்தில் இருந்த இந்திய அணியின் முன்னாள் தலைவரும் அனுவப வீரருமான மகேந்திர சிங் டோனி, மறு முனையில் இருந்த புவனேஷ் குமாரை சிறப்பாக வழிநடத்தி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு செல்ல வித்திட்டார்.

2 ஆவது ஒருநாள் போட்டியில், வழமையாக இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி இம் முறையும் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நிலையில், இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இந்திய அணித் தலைவர் கோலி,  பணித்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்கள் குணதிலக, டிக்வெல்ல ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். கடந்த முதலாவது போட்டியை போன்றே இலங்கையின் மத்திய வரிசை ஆட்டக்காரர்கள் கைகொடுக்கத் தவறிய போதிலும், மிலிந்த சிறிவர்தன மற்றும் கப்புகெதர ஜோடி 6 ஆவது விக்கெட்டுக்காக நிதானமாக ஆடி 91 ஓட்டங்களை சேர்த்தது.

3 ஆவது அரைச்சதம் கடந்த மிலிந்த சிறிவர்தன 58 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். 100ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடும் கப்புகெதர 40 ஓட்டங்களையும், ஆரம்ப வீரர் நிரோஷன் டிக்வெல்ல 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 236 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, இந்திய அணிக்கு 50 ஓவர்களில் 237 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக பூம்ரா 4 விக்கெட்டுக்களையும், சஹால் 2 விக்கெட்டுக்களையும்,அக்சர் பட்டேல், பாண்டியா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

5 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது போட்டியில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் இருக்கும் இந்திய அணிக்கு இப்போட்டியில் துடுப்பெடுத்தாட இருக்கும் நேரத்தில் மழை குறுக்கிட்டதால் போட்டி சற்று தாமதமாக ஆரம்பித்த காரணத்தால் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 47 ஓவர்களில் 231 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்பவிக்கெட் ஜோடியின் முதலாவது விக்கெட் 109 ஓட்டங்களைப் பெற்றபோது சரிக்கப்பட்ட, அகில தனஞ்சயவின் சுழலுக்கு தாக்குப்பிடிக்க முடியாது பலம்பொருந்திய இந்திய துடுப்பாட்ட வீரர்கள் வரிசை 22 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்தது தடுமாறியது.

இருப்பினும் அனுபவசாலியான முன்னாள் தலைவர் டோனி, தன்னுடன் மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய அனுபவமற்ற புவனேஷ்வர் குமாரை மிகவும் அவதானமாக வழிநடத்தி 8 ஆவது விக்கெட்டில் பிரிக்கப்படாத 100  ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க இந்திய அணி 3  விக்கெட் வித்தியாசத்தில் திறில் வெற்றபெற்றது.

டோனியின் நேரடி வழிநடத்தலில் விளையாடிய புவனேஷ்வர் குமார் தனது முதலாவது அரைசதத்தைப் பெற்றுக்கொடுத்தார் . டோனி ஆட்டம் இழக்காது 45 ஓட்டங்கள் பெற்றார்.

2 ஆவது ஒருநாள் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை ஆறு விக்க்கெட்டுகளை கைப்பற்றிய இலங்கை அணியின் புதுமாப்பிள்ளை அகில தனஞ்சய பெற்றுக்கொண்டார்.

நேற்றைய போட்டி இலங்கை அணிக்கு 800 ஆவது ஒருநாள் போட்டியாக அமைந்ததுடன் கோலி விளையாடிய  300 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியாகவும் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49