காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம்  யாழ்.சுன்னாகம் புகையிரத நிலையத்தை  அண்மித்து சென்றுகொண்டிருந்த பொழுது புகையிரதப் பாதையில் நின்ற இளைஞன் ஒருவருடன் மோதுண்டதில் குறித்த இளைஞனின் தலை துண்டிக்கப்பட்டு சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இருப்பினும் சம்பவத்தில் பலியானார் அடையாளம் காணப்படாத நிலையில் சுன்னாகம் புகையிரத நிலையத்தில் சடலம் இப்பொழுது வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்து நடைபெற்ற இடத்திற்கு இருபுறத்திலும் கடவைகள் இருக்கின்ற பொழுதும்  கடவையை பாவிக்காமல் கடக்க முயன்றதினால் விபத்து இடம்பெற்றிருக்கலாம்  அல்லது தற்கொலை முயற்சியாகக் கூட இருக்கலாம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை  சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.