இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 237 ஓட்டங்களை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.

கண்டி பல்லேகலயில் இடம்பெற்று வரும் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 236 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்பம் சுமாராக இருந்தாலும் இலங்கை அணியின் மத்தியதர துடுப்பாட்ட வீரர்களான கப்புகெதர மற்றும் மிலிந்த சிறிவர்தன ஆகியோரின் இணைப்பாட்டத்தின் உதவியுடன் 200 ஓட்டங்களைக் கடந்தது.

மிலிந்த சிறிவர்தன 58 ஓட்டங்களுடனும் கப்புகெதர 40 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல்போட்டியில் வெற்றிபெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.