கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பட்டுத்துணி பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி வழங்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்தது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைக்குழுவிற்கு சொந்தமான 600 மில்லியன் ரூபா  தொகையில் பட்டுத்துணி பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பாக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ் வழக்கானது அரச பொதுப்பணத்தை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றத்தின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டது. 

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷா பெல்பிட  ஆகியோருக்கு எதிராகவே குற்றத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் வாய்வழி அறிக்கை மற்றும் எழுத்துமூல வழக்கு தாக்கல் பத்திரிகை என்பன முடிவடைந்த பின்னர் இவ் வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்படும் என இன்றைய வழக்கு தவணையின் போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.