தொலை­பேசி சிம் அட்­டை­களை பதிவு செய்யும் பணி­யினை முறை­யாக மேற்­கொள்­வ­தற்­காக 1991ஆம் ஆண்டு 25ஆம் இலக்க இலங்கை தொலைத்­தொ­டர்பு சட்­ட விதப்­பு­ரை­களின் கீழ்  தொடர்­பு­பட்ட  அமைச்­சரின் மூலம் வேண்­டுகோள் விடுப்­ப­தற்கும் குறித்த செயன்­மு­றை­யினை செயற்­ப­டுத்தும் அதி­கார சபை அதி­கா­ரத்­தினை இலங்கை தொலைத்­தொ­டர்­புகள் ஒழுங்­கு­ப­டுத்தும் ஆணைக்­கு­ழு­விற்கு ஒப்­ப­டைப்­ப­தற்கும்  அர­சாங்கம் தீர்­மா­னி­த்துள்­ள­தாக   அமைச்­சரும் அமைச்­ச­ரவைப் பேச்­சா­ள­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்தார். 

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற  வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்­பில்­ எ­ழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்;

தொலை­பேசி சிம் அட்­டை­களை பயன்­ப­டுத்தி  பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களும், மோச­டி­களும் இடம்­பெ­று­வ­தாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ளது. ஒருவர் பல சிம் அட்­டை­களை பயன்­ப­டுத்­தியே குறித்த குற்­றங்­களில் ஈடு­ப­டு­கின்­றார். 

எனவே கைய­டக்கத் தொலை­பே­சி­களை பயன்­ப­டுத்தி மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற குற்­றங்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தையும் தேசிய பாது­காப்பு மற்றும் பொது­மக்­களின் சுதந்­தி­ரத்தை பாது­காப்­ப­தையும் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான தக­வல்­களை உள்­ள­டக்கி சிம் அட்­டை­களை பதி­வு­செய்­வது அத்­தி­யா­வ­சி­ய­மா­கி­யுள்­ளது. 

அத­ன­டிப்­ப­டையில், உரிய முறையில் சிம் அட்­டை­களை புகைப்­ப­டத்­துடன் பதிவு­செய்­வ­தற்­கான முறை­யினை பின்­பற்­று­மாறு இலங்கை தொலைத்­தொ­டர்­புகள் ஒழுங்­கு­ப­டுத்தும் ஆணைக்­கு­ழு­வினால் கைய­டக்கத் தொலை­பேசி சேவை வழங்­கு­னர்­க­ளிடம் ஏற்­க­னவே வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

அப்­ப­ணி­யினை முறை­யாக மேற்­கொள்­வ­தற்­காக 1991ஆம் ஆண்டு 25ஆம் இலக்க இலங்கை தொலைத்­தொ­டர்பு சட்­டத்தின் விதப்­பு­ரை­களின் கீழ் விடயத்துக்கு பொறுப்­பான அமைச்­சரின் மூலம் வேண்­டுகோள் விடுப்­ப­தற்கும் குறித்த செயன்­மு­றை­யினை செயற்­ப­டுத்தும் அதி­கார சபை அதி­கா­ரத்­தினை இலங்கை தொலைத்­தொ­டர்­புகள் ஒழுங்­கு­ப­டுத்தும் ஆணைக்­கு­ழு­விற்கு ஒப்­ப­டைப்­ப­தற்கும்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால்   முன்­வைக்­கப்­பட்ட யோச­னை­க­ளுக்கு அமைச்­ச­ர­வையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.