மனித உரி­மைகள் உள்­ளிட்ட விட­யங்­களில் இலங்கை அடைந்­துள்ள முன்­னேற்­றங்­களை வெளிப்­ப­டுத்த வேண்­டு­மென ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைகள் பேரவை அழுத்தம் கொடுக்­க­வேண்டும் என  சர்­வ­தேச மன்­னிப்பு சபை  தெரி­வித்­துள்­ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையின் அடுத்த அமர்வு ஜெனி­வாவில் செம்­டெம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்ள நிலையில் சர்­வ­தேச மன்­னிப்பு சபை இலங்கை தொடர்­பான தீர்­மா­னங்கள் உள்­ள­டக்­கிய இறுதி அறிக்­கையை ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையில் சமர்ப்­பித்­துள்­ளது.

அவ்­வ­றிக்­கையில் இலங்கை இது­வ­ரை­கா­லமும் செயற்­ப­டுத்­திக்­காட்­டிய விட­யங்­களை ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையில் வெளிப்­ப­டுத்த வேண்டும் எனவும் இலங்கை அரச முக­வர்­களால் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­ட­தன்­படி நல்­லி­ணக்கம் மற்றும் உண்­மையை கண்­ட­றிதல் போன்ற விட­யங்­களில் இலங்­கையின் நிகழ்ச்­சி­ 

நி­ரலில் ஏற்­பட்ட முன்­னேற்­றங்கள் தொடர்பில் ஆராய வேண்டும் எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு நீதி, உண்­மையை கண்­ட­றிதல், சர்­வ­தேச தர­நிர்­ண­யங்­க­ளுக்­கேற்ப இலங்கை செயற்­பட்ட விதம் என்­ப­வற்­றுக்கு  இலங்கை அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட தொழில்­நுட்ப மற்றும் நிதிசார் உத­விகள் என்ன என்­பது தொடர்­பிலும் ஆரா­யப்­ப­ட­வேண்டும் என சர்­வ­தேச மன்­னிப்புச் சபை குறிப்­பிட்­டுள்­ளது.  

மேலும் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைகள் முக­வர்கள் இலங்­கையில் மேற்­கொண்ட கண்­கா­ணிப்பு மற்றும் செயற்ப­டுத்தல் செயற்­பா­டு­க­ளின்­போதும் பயிற்­று­வித்தல் செயற்­பா­டு­க­ளின்­போதும் இலங்கை உறு­தி­ய­ளித்த விட­யங்­களை எந்­த­ள­வு­தூரம் செயற்­ப­டுத்தி காட்­டி­யுள்­ளது என்­பது தொடர்­பிலும் ஆராய வேண்­டு­மென சர்­வ­தேச மன்­னிப்பு சபை கோரி­யுள்­ளது.

மேலும் இலங்­கையின் மனித உரிமை மீறல் தொடர்­பான விட­யங்­க­ளுக்கு சட்ட உதவிகளை பெறுவது தொடர்பிலும் சர்வதேச நியமங்களுக்கேற்ப செயற்படுத்தப்பட்ட விடயங்களை ஆராய்வதற்கெனவும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.