விஜே­தா­ஸவின் பதவி நீக்­கத்­திற்கு ரவி விவ­கா­ரமே கார­ண­மாகும் : டலஸ் அழ­கப்­பெ­ரும

24 Aug, 2017 | 01:24 PM
image

நீதி அமைச்­ச­ரா­வி­ருந்த விஜே­தாஸ ராஜ­பக் ஷவின் பதவி நீக்­கத்­திற்கு முன்னாள் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் விவ­கா­ரமே கார­ண­மாகும் என கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டலஸ் அழ­கப்­பெ­ரும தெரி­வித்தார்.

தேர்­தல்கள் திணைக்­க­ளத்­திற்கு நேற்று சென்­றி­ருந்த போது ஊட­க­வி­ய­லா­ளர்கள் வின­விய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக் ­ஷவின் பத­வியில் நேற்று முதல் ஒரு மாற்றம் ஏற்­பட்­டுள்­ளதை சக­லரும் அறிவர். அவர் ஊழலில் தொடர்பு பட்­டி­ருந்தார்,  மோசடி செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்தார், அரச சொத்­துக்­களை சேதம் செய்தார் அல்­லது அதி­கார துஷ்­பி­ர­யோ­கத்தில் ஈடு­பட்டார் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் பதவி விலக்­கப்­ப­ட­வில்லை. 2 கார­ணங்­களே அவரின் பதவி நீக்­கத்­திற்கு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. முத லில் அவர் மீது எப்­போது குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டது என்­பதை சிந்­தித்து  பார்க்க வேண்டும். முன்னாள் வெளி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க பதவி வில­கிய பின்பே முன்­வைக்­கப்­பட்­டது.

மேலும் சட்டமா அதிபர் திணைக்­க­ளத்தின் செயற்­பா­டுகள் குறித்தும் மேற்­படி விவ­கா­ரத்தின்   பின்பே பேச்­சுக்கள் எழுந்­தன. முன்னாள் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் விவ­கா­ரத்தின் பின்பே நீதி அமைச்­ச­ருக்கு அழுத்தம் வரத் தொடங்­கி­யது.

இந்த நாட்டில் தற்­போது சட்­டத்தின் ஆட்சி இல்­லா­மையே சக­ல­துக்கும் கார­ண­மா­கின்­றது. இதற்கு முன்னர் நீதி­ய­ர­ச­ரா­க இருந்த மொஹான் பீரி­ஸையும் தற்­போ­தைய அர­சாங்கம் இவ்­வா­றுதான் விலக்­கி­யது. 43 ஆவது நீதி­ய­ரசர் ஒருவர் இலங்­கையில் இருக்­க­வில்லை என்றும் கூறி­னார்கள்.

அதன் பின்னர் சட்­டமா அதி­ப­ரான யுவஞ்சன் மீது அர­சாங்கம் சேறு பூசி­யதால் அவரும் விலகிச் சென்றார்.  அவரின் பத­விக்கு அவ­ருக்கு அடுத்த மட்­ட­த்தில் இருப்­ப­வரை விடுத்து மூன்றாம் நிலையில் இருப்­ப­வரை பத­வியில் அமர்த்­தி­னார்கள். நள்ளிரவு 12 மணி வரையில் வழக்கு விசா­ரணை இடம்­பெற்­றது. சனிக்­கி­ழ­மை­யிலும் கூட நீதி­மன்­றங்­களில் வழக்கு விசா­ரணை செய்­யப்­பட்­டது. 

அதனால் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தற்போதாவது மக்கள் கண்விழித்து பார்க்க வேண்டும். அப்போது  தான் அரசாங்கம் சதிச் செயற்பாடுகளை முன்னெடுப்பது மக்களுக்கு தெரியவரும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38