விஜயதாஸ விட­யத்தில் தலை­யிட விரும்­ப­வில்லை : தயா­சிறி ஜய­சே­கர

24 Aug, 2017 | 01:09 PM
image

நீதி­ய­மைச்சர்  விஜயதாஸ ராஜ­ப­க்ஷவின் பதவி நீக்கம் தொடர்­பான பிரச்­சி­னை­யா­னது  ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் விவ­கா­ர­மாகும். அதில் நாங்கள் தலை­யிட விரும்­ப­வில்லை. அதை ஐக்­கிய தேசி­யக்­கட்சி பார்த்­துக்­கொள்­ளட்டும் என்று அமைச்­ ச­ரவைப் பேச்­சாளர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். 

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற  வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்­பில்­எ­ழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

கேள்வி: விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ விவ­காரம் தொடர்பில் சுதந்­தி­ரக்­கட்­சியின் நிலைப்­பாடு என்ன?

பதில்: நீதி­ய­மைச்சர்  விஜே­தாஸ ராஜ­ப­க்ஷவின் பதவி நீக்கம் தொடர்­பான பிரச்­சி­னை­யா­னது  ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் விவ­கா­ர­மாகும்.  அதில் நாங்கள் தலை­யிட விரும்­ப­வில்லை.  அதை ஐக்­கிய தேசி­யக்­கட்சி பார்த்­துக்­கொள்­ளட்டும்

கேள்வி: எனினும் உங்கள் கட்­சியில் சுசில் பிரே­ம­ஜ­யந்த இவ்­வாறு  அமைச்­ச­ரவைக் கூட்­டுப்­பொ­றுப்பை மீறி கருத்து வெளி­யி­டு­கின்றார். அது தொடர்பில் என்ன  நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்?

பதில்: அது தொடர்பில் ஆரா­ய­வேண்டும்.   இது தொடர்பில் ஜனா­தி­ப­தியும்  சுதந்­தி­ரக்­கட்­சியும்  முடி­வெ­டுக்­க­வேண்டும். சிலர் தனிப்­பட்ட கருத்­துக்­களை வெளி­யி­டு­வார்கள்,. ஆனால் அமைச்­ச­ரவைக் கூட்­டுப்­பொ­றுப்பை மீறி யாரும் பேசக்­கூ­டாது. தனிப்­பட்ட  கருத்­துக்கள் நிலைப்­பா­டுகள் இருக்­கலாம். ஆனால்  கட்சி முடி­வெ­டுத்­து­விட்டால் அதனை ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும்.  

கேள்வி: தேசிய அர­சாங்­கத்தை ஐக்­கிய தேசி­யக்­கட்­சிதான் நடத்­து­வ­துபோல் தெரி­கி­றதே? சுத ந்திரக்­கட்சி பார்­வை­யா­ளர்போல் இருப்­ப­து­போன்று தெரி­கின்­றதே? என்­னதான் நடக்­கின்­றது?

பதில்: ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் விவ­கா­ரத்தை கையில் எடுக்க விரும்­ப­வில்லை.  இரண்டு கட்­சிகள்  இணைந்து நாட்டை ஆட்சி செய்­கின்­றன.   எனவே இங்கு கருத்து முரண்­பா­டுகள் ஏற்­ப­டலாம். ஆனால் தீர்­மா­னங்கள் எடுத்­த­பின்னர் இணைந்து பய­ணிக்­க­வேண்டும். விஜ­ய­தாஸ விவ­கா­ரத்தில் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சியே  தீர்­மானம் எடுத்­தி­ருக்­கி­றது.  அது  அந்­தக்­கட்­சியின் முடிவு,  ஜனா­தி­ப­தியோ, சுதந்­தி­ரக்­கட்­சியோ இது தொடர்பில் எதுவும் பேச­வில்லை. 

கேள்வி: உங்கள் கட்­சி­யினர்  விஜே­தா­ஸவை சிறந்த  அமைச்சர் என்று கூறி­யி­ருக்­கின்­றனர்.?

பதில்: அது அவர்­களின் தனிப்­பட்ட கருத்­தாக இருக்­கலாம்.   இங்கு  அர­சாங்­கத்தின் பொது­வி­ட­யங்கள், தனிப்­பட்ட விட­யங்கள் என   பல விட­யங்கள்  உள்­ளன. இவற்றைப் புரிந்­து­கொண்­டுதான் பய­ணிக்­க­வேண்டும்.  கட்­சிய என்ற ரீதி­யிலும்  அர­சாங்கம் என்ற  ரீதி­யிலும் பய­ணிக்­க­வேண்­டி­யுள்­ளது. 

கேள்வி: பிர­த­மரை மாற்றும் எண்ணம் சுதந்­தி­ரக்­கட்­சிக்கு உள்­ளதா?

பதில்: சிலர் கன­வு­காண்­கின்­றனர்.   ஆனால்  இரண்டு பிர­தான கட்­சி­களும்  இணைந்து ஆட்சி நடத்­தி­னாலும் கட்­சி­களில் உள்ள அமைச்­சர்­க­ளுக்கு  அதன் தார்­ப­ரியம் புரி­ய­வில்­லைபோல் தெரி­கி­றது. ஒரு­சிலர்  என்­னையும் கூட விமர்­சித்­தி­ருந்­தனர். இவ்­வாறு சேறு பூச முற்­ப­டும்­போது நாங்­களும்  பதில் கூற­வேண்டி ஏற்­ப­டு­கின்­றது.  இப்­போது உதா­ர­ண­மாக கூறு­வ­தென்றால் சைட்டம் தொடர்பில் எங்­க­ளுக்கு வேறு நிலைப்­பாடு உள்­ளது. ஆனால் தேசிய அர­சாங்கம் கூட்­டுப்­பொ­றுப்பு என வரும்­போது நாங்கள் பொது­வான நோக்­கத்தில் பய­ணிக்­கின்றோம். இவற்றை வெளியில் சென்று விமர்­சித்­துக்­கொண்­டி­ருப்­பதில் அர்த்­த­மில்லை. அது கூடாது. 

கேள்வி:  அப்­ப­டி­யாயின் 2020 வரை இவ்­வாறு சத்­தம்­போட்­டுக்­கொண்டு இருக்­கப்­போ­கின்­றீர்­களா?

பதில்: வேறு என்­னதான்  செய்­வது? நான்­கறை வரு­டத்­திற்கு பாராளுமன்றத்தை கலைக்க முடியாது.  ஐக்கியதேசியக்கட்சியிடம் 106 எம்.பி.க்கள்  உள்ளது. அவர்களுக்கு இன்னும் 7 ஆசனம் கிடைத்தால்  தனித்து ஆட்சி அமைக்க முடியும். எமக்கு இன்னும் 17 ஆசனங்கள்  கிடைத்தால் தனித்த ஆட்சி அமைக்க முடியும். ஆனால் சாத்தியமில்லை. இது மக்களின் தீர்ப்பு,  எனவே தேசிய  அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம்.  இவ்வாறுதான்  பயணிக்கவேண்டியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48