அமைச்­ச­ரவைக் கூட்­டுப்­பொ­றுப்பை மீறி­யதன் கார­ண­மா­கவே  விஜே­தாஸ ராஜ­ப­க் ஷவை அமைச்சுப் பொறுப்­பி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கு  ஐக்­கிய தேசி­யக்­கட்சி தீர்­மா­னித்­தது என்று  அக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும்  அமைச்­சரும்  அமைச்­ச­ரவைப் பேச்­சா­ள­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்தார். 

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற  வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்­பில்­எ­ழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்;

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சியல் தலைவர் என்­பதை விட சிறந்த ராஜ­தந்­தி­ரி­யாக செயற்­ப­டு­கின்றார். அவர் அடுத்த தேர்­தலைப் பார்க்­காமல்  அடுத்த சந்­த­தியைப் பார்க்­கிறார்.  150 ஆச­னங்கள் கிடைத்­தாலும் தேசிய அர­சாங்கம்  அமைக்­கப்­ப­ட­வேண்டும் என்­பது பிர­த­மரின் எண்ணம். இதனை அனை­வரும் புரிந்­து­கொள்­ள­வேண்டும். 

இதே­வேளை     விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ அமைச்­ச­ரவைக் கூட்­டுப்­பொ­றுப்பை மீறி­யதன் கார­ண­மா­கவே  பத­வி­நீக்கம் செய்­யப்­ப­ட­வேண்டும் என நாம் வலி­யு­றுத்­தினோம். இது தொடர்பில் எமது செயற்­கு­ழுக்­கூட்­டத்தில் ஆரா­யப்­ப­டட்து.  

அப்­போது எமது  தவி­சாளர் தலை­மையில்  ஒரு குழுவை நிய­மித்து இது தொடர்பில் ஆரா­யு­மாறு  கூறினோம். அதன்­போது தனது  தவறை திருத்திக் கொள்ள அமைச்­ச­ருக்கு சந்­தர்ப்பம்  இருந்­தது. ஆனால் அவர் அதனை செய்­ய­வில்லை. இத­னால்தான் நாங்கள்  அவரைப் பதவி நீக்­க­வேண்டும் என கூறினோம்.  

கேள்வி: அமைச்­ச­ரவை கூட்­டுப்­பொ­றுப்பை மீறியது காரணமா? அல்லது சட்டமா அதிபர் திணைக்கள விவகாரமா?

பதில்: இல்லை. அம்பாந்தோட்டை துறைமுக விகவாரம் தொடர்பில்  அமைச்சரவைக் கூட்டுப்பொறுப்பை மீறியதே இதற்கு காரணமாகும்.