கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள  தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கட்டித்தின் பின்புற சுவரில் மாகாணங்களுக்கு இடையேயான என்பதற்கு பதிலாக ( மாகாணங்கிடை யேயான ) தமிழை கொலை செய்துள்ளனர்.

அண்மை காலமாக இது போன்ற எழுத்து பிழைகள் அதிகரித்த வண்ணமேயுள்ளது.குறிப்பாக தேசிய போக்குவரத்து என்பது பல மாவட்டங்களிலும் இருந்து பல்வேறுபட்ட மக்கள் ஒன்றினையும் ஒரு இடமாக இருக்கிற போதிலும் இந்த தமிழ் கொலையானது மிகவும் வேதனை குறியவிடயமாகவுள்ளது.

குறித்த எழுத்து பிழை சம்மந்தமாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இது போன்று பேருந்துகளிலும் தமிழ் கொலை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.