தெலுங்கு பட உலகில் மெகா ஸ்டாராக இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. இவர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சைரா நரசிம்மரெட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவெனில் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்.

தெலுங்கின் முன்னணி நடிகரும், மாவீரன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகருமான ராம் சரண் இந்த படத்தை தயாரிக்கிறார். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு வீரரைப் பற்றிய இப்படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, கிச்சா சுதீப், ஜகபதி பாபு, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கிறார்கள். இதனை சுரேந்தர் ரெட்டி என்பவர் இயக்குகிறார். இப்படம் ஒரே சமயத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படவிருக்கிறது.

இன்று சிரஞ்சீவியின் பிறந்தநாள் என்பதால் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இணையத்தில் இது பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

தகவல் : சென்னை அலுவலகம்