ரயிலில் வர்த்தக நோக்கில் அனுப்பப்படும் பொதிகளுக்கு அறவிடப்படும் கட்டணம் 50 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடக அமைச்சில் இடம்பெற்று வரும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.